ஆதாரம் இல்லாத புகார்- உதயநிதி குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை அவை தொடங்கியதும் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், சட்டமன்றத்தில் அவையை சபாநாயகர் சிறப்பாக நடத்தி வருகிறார். எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதில் சொல்லும் போது ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டு வைக்கிறார்கள்.

இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறீங்க்கள், வரலாற்று இல்லாத வகையில் அமைச்சரின் பேச்சும் நீக்கப்படுகிறது. ஆனால் அனைத்தும் நேரலையில் போயக்கொண்டுள்ளது. நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே அதிசயப்படும் வகையிலும், ஆச்சரியப்படும் வகையில் அளவிற்கு பதில் கொடுக்கப்படுகிறது. இது சமூகவலைதளத்தில் ரீல்ஸாக பரவி வருகிறது. இது மட்டுமில்லாமல் சட்டமன்றத்தில் பாட்டு நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது.

3 பைல் திறந்து பாருங்க சிஎம் - உதயநிதி

எனவே சட்டம்ன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது எல்லாம் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கி எந்த பயனும் இல்லாமல் போய் விடுகிறது.இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேசிய போது தன்னுடைய டேபிளில் 3 பைல் இருப்பதாகவும் அதனை திறக்க வைத்துவிடாதீங்கள என கூறியிருந்தார். திமுக அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார். எனவே தயவு செய்து அந்த பைலை திறந்து பார்க்க வேண்டும். அதன் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும், எதற்காக பயப்படுகிறீங்கள்.? எதற்காக காலம் தாழ்த்துகிறீங்களா.? இதையே 3 மாதமாக சொல்லிக்கொண்டுள்ளீர்கள். எப்போ தான் திறந்து பார்ப்பீர்களா.? நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கீங்களா.? என கேள்வி எழுப்பினார்.

உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்- உதயநிதி

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டவர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து பேசிய உதயநிதி, சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேரலை செய்தது திராவிட மாடல் அரசு நாங்கள், லைவ் செய்யப்படுகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. ஆனால் ரீல்ஸாக மாற்றப்பட்டு பரவி வருகிறது. பைல்ஸ் சீக்கிரம் திறந்து பாருங்க, யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் திமுகவினர் பயப்பட மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

Source: Read Full Article