ரூ.68 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்! கழிவுநீருக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! காஞ்சிபுரத்தில் என்ன நடக்கிறது?

ரூ.68 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்! கழிவுநீருக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! காஞ்சிபுரத்தில் என்ன நடக்கிறது?
News Image

Kanchipuram Corporation Sewage Treatment: காஞ்சிபுரம் மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை வேகவதி ஆற்றில் திறந்துவிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நீர்வளத் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நத்தப்பேட்டை பகுதியில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

51 வார்டுகளில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை வசதி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 40 வார்டுகளில் கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்காக நத்தப்பேட்டை ஏரிப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த நிலையம் பழுதடைந்ததால் கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் நத்தப்பேட்டை பகுதி மக்கள் புகார் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பழைய நிலையத்துக்கு மாற்றாக நவீன SBR தொழில்நுட்பம்

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக நத்தப்பேட்டை பகுதியில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய நிலையத்தில் ‘சீக்வென்சிங் பேட்ச் ரியாக்டர்’ (Sequencing Batch Reactor - SBR) என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் ஒரே தொட்டிக்குள் காற்றேற்றம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தெளிந்த நீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

தனித்தனி தொட்டிகள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லாததால், குறைந்த பரப்பளவில் அதிக அளவு கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இதேபோன்ற தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1.20 கோடியிலிருந்து 3.60 கோடி லிட்டராக அதிகரிக்கும் திறன்

இதற்கு முன்பு செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுமார் 1.20 கோடி லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினமும் 3.60 கோடி லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய நிலையத்தின் கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு அடுத்த சில மாதங்களில் புதிய சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனமே ஐந்து ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தைப் பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகவதி ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட நீரைத் திறக்க திட்டம்

புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் நத்தப்பேட்டை ஏரியில் விடுவதற்குப் பதிலாக, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேகவதி ஆற்றுக்கு குழாய்கள் மூலம் கொண்டு சென்று திறந்துவிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கும், தேவைக்கேற்ப விவசாயப் பயன்பாட்டிற்கும் ஏற்ற தரத்தில் இருக்கும் வகையில் சுத்திகரிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நத்தப்பேட்டை ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தேங்குவதைத் தவிர்ப்பதுடன், அப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி குறித்து நீர்வளத் துறை ஆய்வு

சுத்திகரிக்கப்பட்ட நீரை வேகவதி ஆற்றில் திறந்துவிடுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நீர்வளத் துறையிடம் மாநகராட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், முன்பு அப்பகுதியில் குறைந்த கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையமே செயல்பட்டு வந்ததாகவும், தற்போது அதிக கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரியில் தேக்குவதற்குப் பதிலாக ஓடும் ஆற்றில் திறந்துவிடுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும், சுத்திகரிக்கப்பட்ட நீரை வேகவதி ஆற்றில் திறந்துவிடுவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதன்பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் நடவடிக்கையா?

புதிய சுத்திகரிப்பு நிலையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் அதிக அளவிலான கழிவுநீரை முறையாகச் சுத்திகரிக்கும் திறன் உருவாகும். குறிப்பாக, நத்தப்பேட்டை ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதாகக் கூறப்பட்டு வந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீரை வேகவதி ஆற்றில் திறந்துவிடும் திட்டத்திற்கு உரிய துறைகளின் அனுமதி கிடைத்த பிறகே நடைமுறைப்படுத்த முடியும். சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம், ஆற்றின் நீரியல் நிலை, சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks