Rs 93 Lakh Hydroponic Drugs Seized at Chennai Airport: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தில், போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் அதிகாலையில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து சோதனை மேற்கொண்டு வந்தனர்.

சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா

அப்போது சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு சென்னை திரும்பிய பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவருடைய சூட்கேஸை திறந்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்த சோதனையில், சூட்கேஸுக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறப்புப் பார்சலில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச மதிப்பு மற்றும் அடுத்தகட்ட விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட 930 கிராம் எடையுள்ள இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.93 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கைதான சென்னை பயணி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ‘கடத்தல் குருவியாக’ (Courier) செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருளை சென்னையில் யாரிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது, அவரை தாய்லாந்திற்கு அனுப்பி வைத்த சர்வதேச போதைக்கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article