TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
News Image

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா காட்டும் அக்கறையை கூட தவெக அரசு காட்ட மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாட்டு விவசாயிகள் வேதனைக்கு தவெக அரசு சரியான தீர்வு காண வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தோம்.

மேகதாது விவாகரம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?, முழு பயிர்க்கடன் தள்ளுபடி என ஆட்சிக்கு வரும் முன் வாக்குறுதி கொடுத்து விட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்?, காவிரி தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி வராமல் போய்விட்டதால் தகுந்த நிவாரணத்தொகை எப்போது கிடைக்கும்?.. டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தகுந்த நிவாரணம் வழங்க வேண்டுமென இந்த தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

தவெக அரசு அமைந்ததில் இருந்து மேகதாது அணை விவகாரத்தில் காட்டாத வேகத்தை கர்நாடகா அரசு காட்டுகிறது. ஒரே ஒருமுறை மட்டும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை வைத்தார். தவெக அரசு ஜூன் 19ம் தேதி தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு செல்ல வேண்டும் என நான் தெரிவித்தேன். இடைப்பட்ட காலத்தில் நாங்கள் சொன்னதை தவெக அரசு செய்யவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட பல கட்சிகள் சொல்லியும் அதனை செய்யவில்லை.

ஒரு மாதத்தில் கர்நாடகா பல நடவடிக்கைகளை அரசியல் வேறுபாடு கடந்து எடுக்கிறது. தமிழ்நாட்டிலும் அப்படி நடக்க வேண்டும். விவசாயிகள் மேல் அக்கறை உள்ள அரசு இதையெல்லாம் கேட்காமல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

உதயநிதி பேச்சை நிறுத்திய சபாநாயகர் நீங்கள் கொடுத்த கடிதத்தில் உள்ளதை மட்டும் பேசுங்கள் என தெரிவிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்பது தான் கோரிக்கையாக உள்ளது. முதலமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு, கடிதம் எழுதிவிட்டு தூங்கி விடுவார் என இப்போதைய முதலமைச்சர் விஜய் சொன்னார். தவெக அரசு ஒரு புது டெக்னிக்கை ஃபாலோ செய்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை லீக் செய்து விட்டு அதில் எதிர்ப்பு எழுந்தால் அதை செய்யாமல் விட்டு விடுகிறார்கள். உதயநிதியின் இந்த பேச்சுக்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உங்களுக்கு பயம், தயக்கம் என்பதை இந்த தவெக அரசு விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks