உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் பதிலடி

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டுள்ளன. காவிரி நமது உயிராதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனால் காவிரியை வைத்து அரசியல் செய்யும் துளியும் நமக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை நேர்முக கடிதமாக பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதோடு இல்லாமல் மாநிலங்களவையில் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் அளித்த பதிலில் முழு விவரம் இல்லை என தெரிந்ததும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான விதிகள் மற்றும் பத்திகளை குறிப்பிட்டு மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அனுமதியையோ, நிர்வாக அனுமதியைஓ வழங்கக் கூடாது என அடுத்த நாளே நேர்முக கடிதம் எழுதினோம். காவிரி நதிநீர் பங்கீட்டிலும் சரி, மேகதாது அணை கட்டும் முயற்சியையும் தடுப்பதிலும் சரி தமிழ்நாட்டின் உரிமைகளை கொஞ்சம் கூட விட்டுத்தராது. அதுதான் நம்முடைய நிலைப்பாடும்.

கருணாநிதி மீது மறைமுகமாக சாடல்

அதேநேரத்தில் கர்நாடகாவில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தது பற்றி 1969ம் ஆண்டில் ஒரு விவாதம் நடந்தது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது அணை கட்ட அனுமதித்தது யார்? என்பது போன்ற மலிவான கேள்விகளை எழுப்ப விரும்பவில்லை. அது நம்முடைய நோக்கமும்இல்லை. காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். எந்த கட்சி ஆள்கிறது, யாருக்கு பெருமை என்றெல்லாம் பார்கக் கூடாது. இது தமிழக மக்களின் பிரச்னை என பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்த எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன் சொன்னதை சபையில் சொல்ல விரும்புகிறேன். காவிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், ஒன்றிய அரசும் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என1969ம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு பிரச்னை வேறு மாதிரி சென்றுவிட்டது என எல்லோருக்கும் தெரியும்.

பெங்களூரு திட்டம் ஏன்?

சட்டப்படி இந்த பிரச்னையை அணுகுவதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என நினைத்து பெங்களூரு பயணத்திற்கு திட்டமிட்டோம். இதுதொடர்பாக பல கருத்துகள் வந்தன. நாம போக நினைத்ததற்கான காரணம் ஒருவேளை இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான ஒரு நேர்மறையான வாய்ப்பு கிடைத்தால் நல்ல இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அண்டை மாநிலத்துடன் பேசி பார்த்தால் என்னவென நினைத்தேன்.

”பேப்பர் படிக்கணும்”

ஒருவேளை அந்த பயணத்தில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிரேன். இருந்தாலும் நம் மீது அன்பு காட்டிய அனைத்து நபர்களுக்கும் என நன்றி. குறுவை சாகுபடிக்கான நிவாரணம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் கேட்டு இருந்தார். இதற்கான நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலே நாங்கள் தான் என சொல்லிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து இருக்கும்” என முதலமைச்சர் விஜய் பதிலடி தந்தார்.

Source: Read Full Article