சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தாலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையிலும் சில உறுப்பினர்கள் அவ்வப்போது பேசி, பேரவையை கலகலப்பாக்குவர். அந்த வகையில் திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சும் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தும். இன்று யார் ஆட்சியில் டென்ஷன்? என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதும் அதற்கு அமைச்சர் ஆனந்த் பதில் சொன்னதும் பேரவையை கலகலப்பாக்கியது.

எழுந்து பதில் சொன்ன அமைச்சர் ரமேஷ்

இதனையடுத்து, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் எழுந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஒரு திரைக்கதையை அழகாக தயாரித்து வந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார் என்றும் அதுவும் போகிற போக்கில் ஐந்தாண்டுகள் விவசாயிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்றும் சொன்னார். குறிப்பாக கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏன் அமைக்கவில்லையென்று தொடர்ந்து விவசாயிகள் கேட்டு போராடிக்கொண்டிருந்தார்கள். தஞ்சாவூரில் கூட அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கேட்டிருப்பார்கள். கரும்புக்கு அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால் அதிகாரிகள் வேறு ஒரு விலைக்கு கரும்பை கொள்முதல் செய்வதாக கூறியெல்லாம் அன்று விவசாயிகள் போராடினர் இதெல்லாம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்ணில் படவில்லைபோல, குறிப்பாக, விவசாயிகளை பட்டியலைப் போட்டவர். ஒரு முக்கியமான விவசாயியை மறந்துவிட்டார். கரும்புத் தோட்டத்தில் கான்க்கீரிட் போட்டு நடந்த விவசாயி பற்றி அவர் சொல்ல மறந்துவிட்டார் என மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சித்தார் அமைச்சர் ரமேஷ்.

பதிலளித்த எம்.ஆர்.கே – குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்

இதனையடுத்து அமைச்சர் ரமேஷ்க்கு பதிலளிக்க எழுந்த திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ’இப்பதான் தெரியுது. நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு, மாண்புமிகு சாமி அமைச்சர்… இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.. என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசத் தொடங்கும்போது முதல்வர் விஜய் அதை கேட்டு, குலுங்கி, குலுங்கி சிரிக்கத் தொடங்கினார். பின்னர் பேரவைத் தலைவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சொன்னதும், அதை பிடித்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார் எம்.ஆர்.கே., இப்படி டெக்னிக்காக பேசிதான் ஆட்சியை பிடித்திருக்கிருக்கீன்றீகள் என்று சொன்னது, அமைச்சர் ரமேஷ் எழுந்து அந்த டெக்னிக்கை இப்போதுதான் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது

Source: Read Full Article