
<p style="text-align: justify;">தமிழ் என்பது வெறும் சொல் அல்ல. அது நமது உயிர் என்றும் தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர் எனவும் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக முதலில் பாடவேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து அவர் இதனை பேசியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;"><em><strong>வந்தே மாதரம் பாடலால் வந்த தீர்மானம்</strong></em></p>
<p style="text-align: justify;">ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமித்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இருக்கும் நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூட ஆளுநர் முன்னிலையில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது. இது பெரும் விவாதத்திற்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது. இது தொடர்பாக 21 எம்.பிக்கள் ஆளுநருக்கு கடிதமும் எழுதினர் . இதனையடுத்து வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்திருக்கிறார். இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் ஆளுநரே பங்கேற்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே முதலில் பாடப்படவேண்டும் என்பது உறுதியாகியிருக்கிறது. </p>
Source: Read Full Article