National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
News Image

தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026

இந்திய மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 போட்டியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் ஆணையத் தலைவருமான அக்பர் இப்ராஹிம், FMSCI தலைவரான அரிந்தம் கோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தய சாம்பியன்ஷிப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு

நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல் மற்றும் குஷ் மைனி உள்ளிட்ட பல முன்னணி பந்தய வீரர்கள் இந்த சாம்பியன்ஷிப் மூலம் உருவாகியுள்ளனர். 2026 பருவத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன், இந்திய மோட்டார்ஸ்போர்ட் சூழலியலை மேலும் வலுப்படுத்துவதோடு, அடுத்த தலைமுறை பந்தய திறமைகளை உருவாக்கும் முக்கிய தளமாக இந்த சாம்பியன்ஷிப் செயல்பட உள்ளது. இதுகுறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் கூறுகையில், “கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட்டின் வளர்ச்சிக்கான ஜேகே டயரின் அர்ப்பணிப்பின் மையமாக இருந்து வருகிறது.

கார் பந்தயத்தில் பெண்கள்

பல தலைமுறைகளைச் சேர்ந்த திறமையான பந்தய வீரர்களுக்கு போட்டியிடவும், மோட்டார்ஸ்போர்ட்டின் உயர் நிலைகளுக்குச் செல்லவும் இந்த சாம்பியன்ஷிப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. உலகத் தரத்திலான போட்டித் தளங்களை உருவாக்குவதுடன், மோட்டார்ஸ்போர்ட்டில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பு முயற்சிகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

போட்டி எப்போது.?

2026-ம் ஆண்டுக்கான தற்காலிக பந்தய அட்டவணையின்படி, முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரை அதே காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும். மூன்றாவது சுற்று நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பிரென் ரேஸ்வேயில் நடைபெற உள்ளது. நான்காவது மற்றும் இறுதி சுற்று டிசம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks