Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
News Image

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் மானவ் சுதர் 10 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்திய சுழல் எதிர்காலம்:

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பிஷன்சிங் பேடி, கும்ப்ளே, ஹர்பஜன், அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சு பங்களிப்பு அளப்பரியது. பல போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டை கடந்த 13 ஆண்டுகளாக தாங்கிப் பிடித்த அஸ்வின் கடந்தாண்டு ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவும் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

இந்த சூழலில், இந்திய அணியின் எதிர்கால சுழல் ஜாம்பவான் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த கேள்விக்கு மானவ் சுதர் தற்போது விடையாக உருவெடுத்து வருகிறார். குல்தீப் யாதவ் அணியில் இருந்தாலும் 24 வயதே ஆன மானவ் சுதர் ஒரு நீண்ட கால சொத்தாக டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

யார் இந்த மானவ் சுதர்?

இடது கை ஆர்த்தோடெக்ஸ் சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார். அந்த போட்டியிலே இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இலங்கைக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ராஜஸ்தானைப் பூர்வீகமாக கொண்ட மானவ் சுதர் அந்த மாநிலத்தின் ஸ்ரீகங்காநகரில் பிறந்தவர். பதின்ம வயதில் பள்ளிகள், மண்டல அளவிலான போட்டியில் சிறப்பாக ஆடிய இவர் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திராவிற்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கினார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தல்:

தொடக்கத்தில் இவர் சில போட்டிகளில் தடுமாறினால் பின்னர், உள்ளூர் கிரிக்கெட்டில் முதல் 8 போட்டிகளில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதில் 4 முறை 4 விக்கெட்டுகளும், 2 முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும்.  சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசிய இவருக்கு  இந்திய ஏ அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

ஆசிய எமர்ஜிங் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக ஆடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராஜஸ்தான் ப்ரிமீயர் லீக் தொடரில் ஜெய்ப்பூர் இந்தியன்ஸ் அணிக்காக ஆடும்போது அனுபவம் வாய்ந்த் வீரர்களுடன் இணைந்து ஆடி பல விஷயங்களை கற்றுக்கொண்டார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இவருக்கு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

37 வயதான ஜடேஜாவும் இந்திய அணியில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளார். அவரது ஓய்வுக்கு பிறகு நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் சுழல் படையைத் தாங்கும் நபராக இந்த மானவ் சுதர் இருப்பார் என்றே கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks