JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
News Image

TN Speaker JCD Prabhakar: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை மாற்ற வேண்டும் என, தவெகவிற்குள்ளேயே குரல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை அதகளம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படுவது என்பது மிகப்பெரும் சவாலாக கருதப்பட்டு வந்தது. அதோடு, சபாநாயகராக தேர்வு செய்யப்படுபவர் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, எதிர்க்கட்சிகளின் குரலை மழுங்கடிக்கச் செய்வார் என்பதையே கடந்த கால வரலாறு உணர்த்துகின்றன. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த அப்பாவு எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சபாநாயகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் தான் தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மிகவும் திறம்பட அவையை வழிநடத்தி வருகிறார். இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் காரசாரமாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி அரங்கேறி வருகின்றன. அதேநேரம், சபாநாயகரின் செயல்பாட்டால் தவெகவினர் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளது.

சபாநாயகர் மீது அப்செட்டில் தவெக அமைச்சர்கள்:

பொறுப்பேற்றது முதலே சபாநாயகர் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்காக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என இரண்டு தரப்புகளுக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.  ஆனால், அந்த வகையில் சபையை வழிநடத்தும்போது ஆளுங்கட்சி அமைச்சர்களின் உரையின் போதே குறுக்கிடுவது, அவர்களது கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்குவது போன்ற அதிரடி முடிவுகளை எடுக்கிறார். உரையை சுருக்கமாக முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்துகிறார். இப்படி அவர் கொடுக்கும் இடையூறுகள் ஆளுங்கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளதாம்.

குறுக்கே வரும் சபாநாயகர்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அமைச்சர்கள், பெரும்பாலான நேரங்களில் கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்களின் நீட்சியாகவே தற்போதைய பிரச்னைகள் உள்ளதாக குறிப்பிடுகின்றனர். அதற்காக முழு விவரங்களையும் பதிவிட்டு திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். அந்த நேரங்களில் குறுக்கிடும் சபாநாயகர் நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள், சுருக்கமாக பேசி முடியுங்கள், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது, கருத்துகளை அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன் என அதிரடி காட்டுகிறார். இதனால் திமுகவின் தவறுகளை அம்பலப்படுத்த வேண்டும் என முயலும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். இதுதொடர்பாக முதலமைச்சரிடமே புகார் பறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்

சபாநாயகரை நீக்க கோரிக்கை:

இதுகுறித்து பேசும் தவெகவினர், ”சபாநாயகர் அவையை நடுநிலையாக நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அதற்காக ஆளுங்கட்சிக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கவா? ஆளுங்கட்சி சபைக்கு வந்துள்ளது” என சாடி வருகின்றனர். மேலும் சிலர் ”ஜேசிடி பிரபாகர் எதிர்க்கட்சிகளுக்கு முழு சாதகமாக செயல்படுவதை போன்று தெரிகிறது. சபாநாயகர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும்” எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், ”சபாநாயகர் நடந்துகொள்வது சரி தான். அனுபவம் இல்லாத தவெக பிரதிநிதிகளை கட்டுக்கோப்பாக வழிநடத்தாவிட்டால், அது ஆளும் அரசுக்கு தான் கெட்ட பெயரை பெற்று தரும். உதாரணமாக கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகரின் செயல்பாட்டை மக்களே வெறுத்ததை பார்க்க முடிந்தது” என சில தவெகவினரும் பதிவிட்டு வருகின்றனர்.

Mr @JCDPrabhakar , EV Velu has been speaking About karunanidhi for 30 mins which was way toooo past, why did you interrupt @sarath0828 when he had couple of praises about @TVKVijayHQ ?

Worstuuuu#Tvk
— Water Bottle🇵🇹 (@waterbotttle_07) August 18, 2026

Have to sack him as speaker pothum
— D E V I L (@DEVILya9) August 18, 2026

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks