காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
News Image

போலீஸ் விசாரணை-ஜோதிடர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லாக் அப் மரணங்கள் நடைபெற்று வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஜோதிடர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் என்ன நடந்தது..? பரமசிவம் உயிரிழப்பிற்கு காரணம் யார்.? என அரசியல் கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த எளிய மனிதர் அய்யா பரமசிவம், சிந்தாமணி காவல் நிலைய அதிகாரிகளாலும் காவலர்களாலும் கொடூரமாக தாக்கப்பட்டு,

காவல் நிலையத்தில் நடந்தது என்ன.?

மண்டையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வரும் தகவல்கள், அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரத்தையும் ஏற்படுத்துகின்றன. வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்சனையில், தன் மனைவி அய்யம்மாளுடன் நியாயம் கேட்டு காவல் நிலையத்தை நாடிய பரமசிவம் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலால் தலையில் பலத்த இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், மருத்துவமனைக்கே சென்று மிரட்டி கட்டாய வெளியேற்றம் செய்ய மிரட்டப்பட்டதோடு, வெளியே சொன்னால் கஞ்சா வழக்கு போட்டு குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என மிரட்டியுள்ளனர்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிந்தாமணி காவல்துறையினரே காரணம் என்று உயிருக்குப் போராடிய நிலையிலும் பரமசிவம் அவர்கள் பதிவு செய்த மரண வாக்குமூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்குகிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுங்க

காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறையை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், சிந்தாமணி காவல் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யவும் ஆணையிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை தரப்பில் ஆதாரங்களை அழிக்கும் வேலைகள் முடுக்கிவிடப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாக மாறுவது மக்களாட்சித் தத்துவத்திற்கே விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். எளிய உழைக்கும் மக்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது அதிகாரத் திமிரோடு நடத்தப்படும் இத்தகைய மனித உரிமை மீறல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

50 லட்சம் ரூபாய் நிவராணம் வழங்குங்க

அய்யா பரமசிவம் அவர்களை அடித்து சித்திரவதை செய்து படுகொலைக்குக் காரணமான, சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.குடும்பத்தின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரமசிவம் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அவரது மனைவி அய்யம்மாள் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் வெளிப்படையான நீதி விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும் என வேல்முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks