சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு

சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
News Image

மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும்  காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட  குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks