Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
News Image

2026ம் ஆண்டுக்கான சுதந்திர தினத்தைக் கொண்டாட ஒட்டுமொத்த இந்திய நாடே தயாராகி வரும் நிலையில் நடப்பாண்டுக்கான தீம் (Theme) என்னவென்று பார்க்கலாம்.

80வது சுதந்திர தினம்

நம் இந்திய நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது நாம் அனைவரும் அறிந்த, என்றும் மறவாத ஒரு நிகழ்வாகும். சுதந்திர தினம் என சொல்லும்போதே நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி இருக்கும். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இந்த நாளில் நாம் சுதந்திர தினத்தை நினைவுக்கூறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்போம். ஏதோ நாமே சுதந்திரத்திற்காக பாடுபட்டு அதனை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுத்த உணர்வை கொண்டிருப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் கிழமைகள் மாறுமே தவிர ஆகஸ்ட் வந்தாலே எப்போது சுதந்திர தினம் வரும் என்பது தான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் 2026ம் ஆண்டு 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியெற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

2026 சுதந்திர தின கருப்பொருள் இதுதான்

80வது சுதந்திர தினத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ கருப்பொருளை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் விக்சித் பாரத் 2047 என்ற இலக்கின் கீழ் " சுதந்திரத்தைப் போற்றுவோம், எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்" என்ற முழக்கத்தின் கீழ் நாடு தழுவிய பரப்புரை கொண்டாட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

2026 சுதந்திர தினம் என்ன ஸ்பெஷல்?

சுதந்திர தின அணிவகுப்பின் போது ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு இணங்க முதல் முறையாக, துப்பாக்கி மரியாதை செலுத்துதலின் போது பயன்படுத்தப்படும் சம்பிரதாய பீரங்கிகளும் உபகரணங்களும் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.

பிரதமர் மோடி அளிக்கும் உரை நிகழ்நேரத்தில் 22 இந்திய மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு ஏஐ தொழில்நுட்ப உதவியுடன்டிஜிட்டல் இந்தியா பாஷினி தளம் மூலம் ஒளிபரப்பப்படும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த நாள் ஆகஸ்ட் 15ம் தேதியாகும். இதனால் இந்தியாவின் கடைசி வைசிராயான லார்ட் மவுண்ட் பேட்டன் பிரபு இந்த நாளை தேர்வு செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தார்.  மேல் பகுதி காவி, நடுப்பகுதி வெள்ளை, கீழ்ப்பகுதி பகுதி பச்சை, வெள்ளைப்பகுதியின் நடுவே 24 ஆரங்களைக் கொண்ட அசோகச்சக்கரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்திய தேசிய கொடியை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks