6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!

6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
News Image

தமிழகத்தில் தொழில் முதலீடு

தமிழகத்தில் தொழில் துறையில் பல்வேறு முதலீடுகள் ஈர்க்க புதிதாக பதவியேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க அரசு பொறுப்பிலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் திட்டங்களால் வாழ்வாதாரம் மாற்றம் ஏற்படும் எதிர்பார்த்த மக்களுக்கு இடமாற்றம் ,பெயர் மாற்றம் மட்டும் தான் கிடைத்து வருகிறது . தற்போது பட்ஜெட்டில் மேகதாது குறித்து பிரச்சினை நடைபெற்று வருகிறது. தற்போது தொழில் முதலீடு குறித்த ஆய்வு அறிக்கை நமக்கு கவலை அளித்து வருகிறது .

புதிய தொழில் முதலீடுகள்

கடந்த நிதியாண்டில், நான்காம் காலாண்டில் 54 தனியார் திட்டங்கள் உட்பட 180 திட்டங்கள் தொடங்கப்பட்டன இதன்படி 44,036 கோடி அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து த.வெ.க அரசு பொறுப்பேற்று முதல் காலாண்டில் 62 தனியார் திட்டங்கள் உட்பட மொத்தம் 121 திட்டங்கள் மூலம் 11,236 கோடி திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அதாவது தனியார் முதலீட்டில் 77.60 சதவீதம், ஒட்டுமொத்த முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 74.48 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டை ஈர்பபதில் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 6வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 17 இடத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தை போல கேரளா,கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புதிய முதல்வர்கள் வந்துள்ளார்கள். கேரளாவில் புதிய முதலமைச்சர் 16 தனியார் திட்டங்கள் மூலம், 2,363 கோடி  ஈர்த்துள்ளார்.இதன் மூலம் முந்தைய காலண்டுடன் குறிப்பிடும் பொழுது 1139 கோடி உயர்வாக உள்ளது.இத்துடன் சேர்த்து மொத்தம் 63 திட்டங்களில் 12,032 கோடி முதலில் ஈர்க்கப்பட்டுள்ளது.

பின் தங்கிய தமிழகம்

இது முந்தைய காலாண்டை  விட 294 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் தொழில்துறையில் 20 இடத்திலிருந்து கேரளா தற்போது 16 இடத்தில் முன்னேறி உள்ளது. அதேபோல கர்நாடகமும் 9வது இடத்தில் இருந்து தற்போது 3வது இடத்தில் முன்னேறி உள்ளது. அதேபோல மேற்கு வங்காளத்தில் 199 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் தனியார் முதலீடு 417 சதவீதம் அதிகரித்து உள்ளது ஆகவே இன்றைக்கு தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளது இது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks