விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணைக் கட்டுவதை தடுக்க முயற்சிக்காத தவெக அரசை கண்டித்தும் தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவின் முக்கிய முகங்கள் பங்கேற்றன.

என்னாச்சு, என்னாச்சு.. தவெக அரசுக்கு எதிராக முழக்கம்

ஆர்ப்பாட்டத்தின்போது, சி.எம்.சார், சி.எம்.சார், என்னாச்சு, என்னாச்சு என முழக்கங்கள் எழுப்பி தவெக அரசின் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியையும் குறிப்பிட்டு அது என்னாயிற்று என்ற கேள்வியை ஆர்ப்பாட்டதில் எழுப்பினர். குறிப்பாக, பயிர் கடன் தள்ளுபடி என்னாச்சு, நகை கடன் தள்ளுபடி என்னாச்சு, மகளிருக்கு 2500 ரூபாய் என்னாச்சு, விவசாய நிவாரணம் என்னாச்சு, ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் என்ன ஆச்சு ? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Source: Read Full Article