CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
News Image

CM Vijay MPs Meeting: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாலை பிற்பகல் சென்னையில் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் அரசு அழைப்பு..!

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தது முதலே, பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அரசுக்கு ஆதரவளித்து வரும் கூட்டணி கட்சிகளும், தோழமை கட்சிகளும் கூட அவ்வப்போது அரசுக்கு தர்சமசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்பார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

காவிரிக்கு NO..! தொகுதி மறுவரையறைக்கு YES..!

காவிரி மேகதாது அணை தொடர்பான பிரச்னை கடந்த வாரம் வரை தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்து இருந்தது. அப்போது முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மாநிலத்தின் ஒற்றுமையை கர்நாடகாவிற்கு காட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அந்த கோரிக்கையை ஆளும் தரப்பு முற்றிலுமாக நிராகரித்தது. ஆனால், தற்போது யாருமே எதிர்பாராத விதமாக தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதேநேரம், ஆளுங்கட்சியான தவெக சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?

அரசியல் கணக்கீடுகளா?

அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல அரசியல் கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,

தவெக அரசு தனி ஆவர்த்தனம் செய்ய முயல்கிறது என்ற திமுகவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி, மாநில உரிமைகளுக்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்பதை உறுதிப்படுத்த முதலமைச்சர் விஜய் விரும்புகிறாராம்

தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜக உடன் இணையவும், குறைந்தபட்ச செயல்திட்டங்களை கொண்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கவும் திமுக ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதற்கு முட்டுகட்டை போடவும் இந்த கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்

தேர்தலுக்கு முன்பாக எதிர்த்த மசோதாவிற்கு தற்போது ஆதரவு அளிக்கலாம் என திமுக முடிவு செய்தால், அதன் மூலம் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்த முடியும் எனவும் அரசு கருதுகிறதாம்

இதுபோக, திமுக ஒருவேளை இந்த கூட்டத்தை புறக்கணித்தால், அதையும் தங்களுக்கான மைலேஜாக மாற்றவும் பனையூர் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

சொந்த பிரதிநிதிகள் இல்லாத நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் மூலம், தங்களது கருத்துகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யும் வகையிலும் அரசு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாம்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks