என்னதான் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் விஜய் எல்லா திட்டத்திற்கும் வெற்றி என பெயரிடுவது சரியல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கந்தன்மலை படத்தைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “செய்..செய்யாதே” என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சி முடிந்தபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விஜய் என்றாலே வெற்றி தானே

பாஜக மூத்த தலைவரும், எனது சகோதரருமான ஹெச்.ராஜா நடித்த செய் செய்யாதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். போதைப் பொருளை தடுப்பதற்கும், மருத்துவத்துறையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதற்குமான படமாகும். அதன் காரணமாக மருத்துவத்துறையில் உள்ள நான் கலந்துக் கொண்டேன். திரைத்துறையை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும் போது அரசியலில் இருப்பவர்கள் நடிக்க வரும் சூழல் வந்து விடுகிறது என நினைக்கிறேன். எனக்கு அதிகமாக திரைப்படம் பார்க்கும் பழக்கமில்லை என்றாலும் நல்ல படங்களை தவற விடுவதில்லை என தெரிவித்தார்.

அப்போது அவரிடம் பட நிகழ்ச்சி மேடையில் பேசும்போது விஜய் என்றாலே வெற்றி என சொன்னீர்களே என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை, விஜய் என்றால் வெற்றி என்றால் அதனை அவர் அடைந்து விட்டார். எங்களைப் பொறுத்தவரை மோடி என்றாலும் வெற்றி தான். ஆனால் எல்லாவற்றிலும் வெற்றி போட்டு விடக்கூடாது. விஜய் தனது பட்ஜெட்டில் 150 திட்டங்களுக்கு வெற்றி என பெயரிட்டுள்ளார்.

Also Read: CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

பட்ஜெட் பற்றி கருத்து

தேர்தலில் வெற்றி பெற்றது சரி தான். ஆனால் எல்லா திட்டத்தின் பெயரிலும் வெற்றியைச் சேர்த்து உங்கள் கட்சியை நிலை நிறுத்துவது என்பது தவறு. தமிழக அரசின் பட்ஜெட் கொஞ்சம் ஏமாற்றமானது. முதல் பட்ஜெட் என்பதால் இன்னும் தன்னை தவெக மேம்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அதேசமயம் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் பெண்களை யாரும் இழிவுப்படுத்தினாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்பது சொல்லப்படுகிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவாக பேசியதால் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட இருக்கிறார். இதனையெல்லாம் பார்க்கும்போது எந்தவொரு மதத்தையும், அந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது என்பது எனது கருத்தாகும். மதச்சார்பின்மை என்பது எல்லாருக்கும் உள்ளது. ஆனால் தொடர்ந்து இந்து மதத்தின் உணர்வுகள் மறுக்கப்படுகிறது.

பாரப்பட்சம் காட்டப்படும் இந்து மதம்

தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் இன்று முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய காரணங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்துக்களின் மத உணர்வுகள் பாரபட்சமாக அணுகப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜித்தபோது எழுந்த எதிர்ப்புக் குரல், நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த போது எழவில்லை எனவும் தமிழ்சை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

Source: Read Full Article