இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, போதை பொருட்களை ஒழிக்க சிறப்பான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

இதில், முதல்வர் விஜயே போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்து அனைத்து மாணவர்களையும் கைகளை நீட்டி உறுதியேற்க வைத்தார். அதோடு, தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் காட்சிகளும், போதை பொருட்களால் மாணவ சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து, சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் முதல்வர் விஜய் கையால் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி சங்கர் பேசித் தொடங்கினார்.

கவனித்த விஜய் - உடனே அழைத்த தலைமைச் செயலாளர்

அப்போது, காவல் அதிகாரியின் மகனான சிறுவன் ஒருவன் காவல்துறை சீருடையில் மிடுக்காக அமர்ந்திருப்பதை முதல்வர் விஜய் கவனித்து, புன்முறுவலோடு தலைமைச் செயலாளரிடம் தெரிவித்தார். அந்த சிறுவனை உடனடியாக மேடைக்கு அழைத்தார் தலைமைச் செயலாலர் சாய்குமார். சிறுவன் மேடைக்கு வந்ததும் அவனை எழுந்து தூக்கி கொஞ்சினார் முதல்வர் விஜய். பின்னர் அவரது தந்தையான காவல் அதிகாரியையும் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அந்த சிறுவனுக்கு முதல்வர் விஜய் சல்லியூட்டும் வைத்தார். இதை கண்ட அரங்கில் கூடியிருந்த மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Source: Read Full Article