CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
News Image

CM Vijay On Karunanidhi: காவிரி விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் விஜய் மறைமுகமாக சாடியிருந்தார்.

கருணாநிதியை விமர்சித்த CM விஜய்..!

கர்நாடகா உடனான காவிரி நதிநீர் பங்கீடு மீண்டு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதங்களும் அரங்கேறின. அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், “கர்நாடகாவில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தது பற்றி 1969ம் ஆண்டில் ஒரு விவாதம் நடந்தது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது அணை கட்ட அனுமதித்தது யார்?” என கேள்வி எழுப்பி இருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நீர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அவரை சுட்டிக்காட்டி தான் முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார். எனில், அந்த குறிப்பிட்ட விவாதத்தின் போது கருணாநிதி பேசியது என்ன? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அந்த விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

1969ல் கருணாநிதியின் சட்டப்பேரவை உரை

அப்போது மைசூரு என அழைக்கப்பட்ட தற்போதைய கர்நாடகாவுடனான நநிதீர் பகிர்வு பிரச்னை தொடர்பாக, 1969ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விரிவான விவாதம் நடைபெற்றது.அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த கருணாநிதி, “தமிழ் நாட்டில் காவிரிப்பாசனம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கரிகாலன் கல்லணை கட்டியதும், காவிரியின் கரையைப் பலப்படுத்தியதும், வரலாற்றுச் சான்றுகளும் தமிழ் நாட்டுக்குக் காவிரியின் மேல் இருந்த உரிமைக்கு சான்றுகளாகும். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் மைசூர், பல நீர்ப்பாசனத் திட்டங்ககளத் தொடங்கிய பொழுது சென்னை மாநில அரசு தனது மறுப்பினை தெரிவித்தது. அந்த மறுப்பின் காரணமாக 1892-ஆம் ஆண்டு ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டின் அனுபந்தத்தில் கண்டுள்ள காவிரியும் அதன் உபநதிகளும். பெண்ணை, பாலாறு, துங்கபத்திரா போன்ற 15 நதிகளில் மைசூர் அரசாங்கம் தீர்த்தேக்கங்கள் கட்டுவதானால் அந்த நீர்த்தேக்கங்களைப் பற்றி முழுமையான புள்ளி விவரங்களையும் சென்னை அரசுக்குக் கொடுத்து அதன் முழு சம்மதத்தையும் பெற்ற பிறகே கட்டலாம் என்று 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 2-வது, 3வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. மைசூர் அரசு தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் காவிரிப்பாசனத்தைப் பாதிக்கின்ற வகையில் மேலும் சில நீர்த்தேக்கங்களைக் கட்ட முற்பட்டபோது அன்றிருந்த சென்னை அரசும் மைசூர் அரசும் 1924-ம் ஆண்டு ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

புதிய அணைகளுக்கான ஒப்பந்தம்

குறிப்பாக மைசூர் அரசு கிருஷ்ணராஜ்சாகர் அணைத் திட்டம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்படுத்திய  உடன்பாடாகும். அதன்படி 45 ஆயிரம் மில்லியன் கனஅடி (45 TMC) கொள் அளவுள்ள கிருஷ்ணராஜ் சாகர் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த பாசனத்தோடு மேற்கொண்டு காவிரி மேட்டூர் பிராஜக்ட் (URIP, திட்டத்தின் கீழ் 3.01 லட்சம் ஏக்கர் புதியதாகப் பாசனம் ஏற்படுத்தவும் மேட்டுர் நீர்த்தேக்கம் கட்ட வும் வழிவகை செய்யப்பட்டது. இதை அன்னியில் மேற்கொண்டு மைசூர் அரசாங்கம் காவிரியிலும் அதன் உபநதிகளாகிய ஹேமாவதி, லட்சமணதீர்த்தா, கபினி, சுவர்ணவதி, யாகச்சி போன்ற நதிகளில் நீர்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு அந்த நீர்த்தேக்கங் களைப்பற்றிய முழு புள்ளி விபரங்களையும் தரவேண்டும்.

மாநிலங்களுக்கான நீர் பகிர்வு

அம்மாதிரி நீர்த்தேக்கங்கள கட்டும்போது தமிழகத்திற்குச் சேரவேண்டிய தண்ணீரின் அளவு குறையக்கூடாது. அந்தத் தண்ணீரின் அளவு ஜூன் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் முடிய வருடத்தில் 8 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் எந்த அளவு தண்ணிர் வந்து சரவேண்டும் என்று தெளிவாக உடன் பாட்டில் குறிப்பிட்டுள்ளது. மீதியுள்ள மாதங்களிலும் கோடைக் காலப் பயிருக்காக எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவைத் திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல் அணைக்கட்டில் அளந்து பார்த்து நமக்கும் கிடைக்க வேண்டிய அளவு, தண்ணி வந்து சேருகிறதா என்று பார்த்து கொள்ளவும் வழி வகுக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

மத்திய அரசு தலைமையில் பேச்சுவார்த்தை

இந்த உடன்பாடு மைசூரு அரசு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்படாமல் புதிய தீர்தி தேக்கங்களைக் கட்டிக்கொள்ள வழி வகை செய்கிறது என்பது உண்மை. ஆனால், அவர்கள் தமிழக அரசுக்கு முழு விவரங்களையும் தராமல் தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவுக்குக் குந்தகம் ஏற்படாமல் இருக்கிறதா என்று பார்க்காமல் எந்தத் திட்டங் களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு இருந்தும் மைசூர் அரசு ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, சுவர்ணவதி போன்ற நதிகளில் தீர்த்தேக்கங்களைக் கட்டத் தொடங்கியிருக்கிறது. இது, தமிழ் நாட்டின் நீர்ப் பாசனத்தைப் பாதிக்கும் என்பதற்கு ஐயமே இல்லை. ஆகவேதான் 1968-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் அன்று பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நானும் மைசூர் மாநில முதல்வர் விரேந்திர பட்டீலும், மத்திய அமைச்சர் கே.எல்.ராவும் , டெல்லியில் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தின்போது, வீரேந்திர பட்டீல், கே. எல். ராவ் ஆகியோர், தமிழ் நாட்டுக்கு 1924-ஆம் ஆண்டு உடன்பாட்டின்படி உத்திரவாதம் அளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண் டார்கள். அதாவது தமிழகத்திற்கு உத்திரவாதமளிக்கப்பட்ட தண்ணீரின் அளவைத் தராமல் அவர்கள் தங்களின் புதிய நீர்த்தேக்கங்களில் தண்ணீரைத் தேக்கக்கூடாது என்று வலியுறுத்தி கூறினேன். அதற்கு ஒரு தண்ணீர் தேக்க முறை (Impounding formula) நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று சொன்னேன். அதனையும் திரு,விரேந்திர பம்மல் ஒப்புக் கொண்டார்கள்.

பதில் தராத கர்நாடக அரசு

டெல்லி விவாதம் முடிந்த பிறகு மத்திய அரசும், மாதில அரசும், பல நடவை எழுதிக் கேட்டும் மைசூர் அரசு நமக்கு முழுத் தகவல்களையும் தாரதது மட்டுமின்றி. சரியாகப் பதில் கூட அனுப்பவில்லை.  திட்டக் குழுவும், மத்திய நீர்ப்பாசன மின்விசை வல்லுநர் குழுவும், ஹேமாவதி போன்ற எத்தத்த்க்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்தப் பேரவையின் உறுப்பினர்கள், மைசூர் அரசு கட்ட இருக்கும் ஹேமாவதி போன்ற திட்டங்கள், தமிழகத்தின் பாசனத்தைப் பாதிக்கும் என்று ஐயப்படுவது முறையேயாகும். ஆனால் இந்தப் பிரச்னையை எப்படி சுமூகமான முறையில் தீர்க்க முடியும் என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி. இது ஒரு மாநித்லத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகையினால், மத்திய அரசு தான் இதில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பதும் முறையாகும்.

விதிகளை மதிக்காத கர்நாடகா..!

எனவே அவர்கள் தலையிட்டு தீர்த்து  வைப்பார்கள் என்று நம்புகிறேன். ஏற்படுத்தப்படுகிற எந்த உடன்பாடுகளையும் மதிக்க வேண்டும் என்பது சாதாரண ஒரு நியதியாகும். அது இல்லையென்றால் சமூகம் எது? அரசு ஏது? மைசூர் மாநில மக்களிடம், தமிழக மக்களுக்கோ, தமிழக அரசுக்கோ என்றுமுள்ள நட்புறவு இதனால் பாதிக்கப்பட மாட்டாது என்றும், பாதிக்கக்கூடாது என்றும் நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால், மைசூருக்கும் தமிழக அரசுக்கும் 1892, 1921-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி, மைசூர் அரக புதிய தீர்த் தேக்கங்களை கட்ட முற்பட்டுள்ளது. இது சரியும் அல்ல, முறையும் அல்ல. அவர்கள் மறுபரிசிலனை செய்து உடன்பாட்டில் கண்டுள்ள ஷரத்துக்களின்படி புதிய நீர்த்தேக்கங்களைக் கட்டலாம். அதில் தமக்கு ஆட்சேபனை இல்லை, உடன்பாட்டிற்குப் புறம்பாகச் செல்லவேண்டாம் என்கிறோம். மைசூர் அரசு உடன்பாட்டை மதித்து நடக்குமானால் இரு அரசுகளுக்குமிடையில் இன்று நிலவும் நல்லுறவு மேலும் வலுப்படும்” என கருணாநிதி பதிலுரை தந்துள்ளார்.

ஆனால், இதையெல்லாம் கர்நாடக அரசு சற்றும் காதில் வாங்காமல், நீர்தேக்கங்களை கட்டும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks