Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
News Image

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி  சுதந்திர தின விழா கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையில் கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் கொடியேற்ற உள்ளார். இதற்காக காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற உள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பிற்காக ஒத்திகை நடைபெற உள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

நிகழ்ச்சி ஒத்திகைக்காக ஆகஸ்ட் 7, 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக, சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரையிலான ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை.

2. காமராஜர் சாலை - ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்துசாமி பாலம் - முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம்.

3. பாரிமுனையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - முத்துசாமி சாலை - முத்துசாமி பாலம் - அண்ணாசாலை - வாலாஜா சாலை வழியில் காமராஜர் சாலை செல்லலாம்.

4. சிவப்பு மற்றும் ஊதா நிற வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்.

5. இந்த வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர்கள் 8.30 மணிக்கு பிறகு வந்தால் போர் நினைவுச் சின்னம் - கொடி மரச்சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்கச்சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கி பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

6. நீல மற்றும் இளஞ்சிவப்பு நிற வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை - போர் நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்துசாமி சாலை - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

7. நீல, இளஞ்சிவப்பு வாகன அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8.30 மணிக்கு பிறகு வந்தால் காமராஜர் சாலை - வாலாஜா சாலை - முத்துசாமி பாலம் - வடக்கு கோட்டை பக்க சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனத்தை பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் விட வேண்டும்.

8. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருபவர்கள் போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி, தீவுத்திடல் உள்ளே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஒத்திகை நடைபெறும் 3 நாட்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை இருக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks