டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
News Image

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்ற தகவலை அமைச்சர் விக்னேஷ் மறுத்துள்ளார். இதுபோன்ற தவறான தகவல்கள் தெரிவிப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் அதிரடி நடவடிக்கை

முதலமைச்சர் விஜய் தலைமலையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து பல துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் மூலமாக உள்ள டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சி நிதி, பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக பெறுவது போன்றவற்றை முதற்கட்டமாக நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மூலமாக வரும் வருவாயை வேறு எதன் மூலமாக பெறலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே டாஸ்மாக் கடைகளில் விரும்பிய மதுபானங்கள் கிடைப்பதில்லை, குறிப்பிட்ட ஒரு சில கம்பெனிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆன்லைன் மூலம் மது விற்பனை

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானது. அதோடு மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டதாகவும் டெமோ வீடியோ வெளியானது.

Also Read: மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாஸ்மாக் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்பதில் உண்மையில்லை. மதுபானங்கள் மூலம் வரும் பணம் அவசியமா என்று நினைக்கும்போது இதை எப்படி செய்வோம் என பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் வெளிப்படைத்தன்மையை பேணும் பொருட்டு தான் ஒரு கடையில் என்ன மாதிரியான மதுபானங்கள் இருக்கிறது, பில் கொடுப்பது போன்றவற்றால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டு தான் வருகிறது எனவும் கூறினார்.

மதுபானங்கள் விலை உயர்வா?

மதுபானங்களை ஆன்லைனில் தேர்வு செய்து பணம் செலுத்திய பின் கடைகளில் சென்று தான் அவற்றை வாங்க முடியும். இதில் எந்த முறைகேடும் இல்லை. ஆன்லைனில் வாங்க தெரியாதவர்கள் நேரடியாக பணம் செலுத்தி வாங்கலாம். டாஸ்மாக் கடைகளின் சுற்றுப்புறம் மோசமாக உள்ளது. அதன் தரத்தை உயர்த்தலாம் என நினைத்தால் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக்க திட்டமா என கேட்கிறீர்கள். உண்மையிலேயே தப்பு இருந்தால் சொல்லுங்கள், அரசியலுக்காக செய்யாதீர்கள்.

மதுபான விலைகள் உயர்த்த மாட்டோம். இவ்வளவு ஆண்டுகள் நடந்த ஊழலை நிறுத்துவதால் அரசுக்கான வருவாய் அதிகமாகும் என்பது என் எண்ணமாகும். மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்படும். 2011ம் ஆண்டு முதல் பாட்டிலுக்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. திமுக, அதிமுக என எந்த அரசும் இதனை நிறுத்தவில்லை. தவெக ஆட்சியில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks