சில நிமிடங்கள் கையில் இருந்தால் போதும்... மதுரையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு ஈசியா பறக்கலாம் !

சில நிமிடங்கள் கையில் இருந்தால் போதும்... மதுரையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு ஈசியா பறக்கலாம் !
News Image

மதுரையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அவசர கால மருத்துவ சேவை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடக்கம்.

கோயில் நகரம் என்று போற்றப்படும் மதுரைக்கு ஏராளமான சுற்றுளாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மீனாட்சியம்மன் கோயில், பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மதுரை மாநகர் மையமாக அமைந்துள்ளது. இதனால் மதுரைக்கு பேருந்து சேவை, ரயில் சேவைகள் மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் வளர்ச்சியால் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மதுரைக்கு மெட்ரோ திட்டமும் அவசியமான ஒன்று எனவும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் அடுத்தகட்ட வளர்ச்சியாக வான்வழி இணைப்பை அதிகப்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவை

தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கருமுத்து ஹரி தியாகராஜன் மையத்தை தொடங்கி வைத்தார்.

ஹெலிகாப்டர் சேவை

இந்த மையம் மூலம் மருத்துவம், அவசரகால சேவைகள், தொழில் மற்றும் சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த வழிபாட்டுத் தளங்களான ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த நேரத்தில் பயணம்

மதுரை to திருச்செந்தூர் 30 நிமிடம்

மதுரை to ராமேஸ்வர்ம் 30 நிமிடம்

மதுரை to கொடைக்கானல் 30 நிமிடம்

மதுரை to சென்னை 1 மணி நேரம் 10 நிமிடம்

மதுரை to பெங்களூர் 1 மணி நேரம் 1/2 மணி நேரம்.

ஹெலிகாப்டரில் 5 நபர்கள் வரை பயணம்

அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும். ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும். இந்த ஹெலிகாப்டரில் 5 நபர்கள் வரை பயணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks