வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது

வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
News Image

" இளம் பெண் அறையில் அத்து மீறி நுழைந்த நபர் "

சென்னை வேளச்சேரி பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் , கடந்த ( ஆகஸ்ட் - 20 ) ஆம் தேதி இரவு வீட்டில் வழக்கம் போல தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் , தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மகளின் அறைக்கு சென்ற நிலையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை , தனது மகளுடன் வேளச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து , சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் , வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாலுச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலுச்சாமி மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதுடன், சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks