ஆவணி பௌர்ணமி நன்னாளில் காஞ்சி காமாட்சி அம்மனை தங்கத் தேரில் தரிசித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆவணி பௌர்ணமி நன்னாளில் காஞ்சி காமாட்சி அம்மனை தங்கத் தேரில் தரிசித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
News Image

Kanchipuram Kamakshi Amman Temple Golden Chariot Festival 2026: புகழ்பெற்ற திருத்தலமும், 51 சக்தி பீடங்களில் முதன்மையான "காமாட்சி பீடமாக" திகழ்வதுமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மாத பௌர்ணமி திதியை முன்னிட்டு தங்கத் தேர் உற்சவம் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளல்

ஆவணி பௌர்ணமி நன்னாளினை முன்னிட்டு, காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அம்பாளுக்கு இளம் நீல நிற பட்டு உடுத்தப்பட்டு, விலையுயர்ந்த திருவாபரணங்கள் மற்றும் மணமிக்க மல்லிகை, சாமந்தி மலர் மாலைகளால் எழில் கொஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டது. லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த அம்பாள், மங்கள வாத்தியங்கள் முழங்க தங்கத் தேரில் எழுந்தருளினார்.

பக்தர்கள் வடம் பிடித்துத் தரிசனம்

அதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, உபயதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கத் தேரினை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வளாகப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்த தங்கத் தேரில், காமாட்சி அம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் காஞ்சிபுரம் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். "ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்ட, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்பாளைத் தரிசித்துச் சென்றனர்.

காஞ்சி காமாட்சி அம்மனின் மகிமையும் பெருமையும்

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகிலுள்ள அனைத்துச் சக்தி வடிவங்களும் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனின் கண் பார்வையில் அடங்கியுள்ளதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இதனால் தான் காஞ்சி நகரில் காமாட்சி அம்மன் கோவில் தவிர தனியாக அம்மன் சந்நிதிகள் வேறு எந்தக் கோவிலிலும் அமைவதில்லை என்ற தனிச்சிறப்பும் உண்டு.

அன்னையின் கண்கள் கருணை பொங்குபவை என்பதால் 'காமாட்சி' (கா - விருப்பம்/கருணை, அட்சி - கண்) என்று அழைக்கப்படுகிறாள். ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில், பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்து, தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்வது சகல ஐஸ்வர்யங்களையும், நோயற்ற வாழ்வையும் தரும் என்பது பக்தர்களின் நீங்காத நம்பிக்கையாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks