திருப்பூர்வாசிகளுக்கு குட் நியூஸ்! நொய்யல் ரோட்டில் உருவாகும் பிரம்மாண்ட 'Food Street'! என்னென்ன வசதிகள் தெரியுமா?

திருப்பூர்வாசிகளுக்கு குட் நியூஸ்! நொய்யல் ரோட்டில் உருவாகும் பிரம்மாண்ட 'Food Street'! என்னென்ன வசதிகள் தெரியுமா?
News Image

Tiruppur Food Street Project: வேலை தேடியும், பணி நிமித்தமாகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் தொழில் நகரமான திருப்பூர் மாநகரம் இருந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் காலை முதல் இரவு வரை மக்கள் உணவகங்களையும் தள்ளுவண்டி கடைகளையுமே பெரிதும் சார்ந்துள்ளனர். இந்நிலையில், நகரில் இயங்கும் பல தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரம் குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்த சூழலில், பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஒருங்கிணைந்த 'உணவு வீதி' (Food Street) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உணவு வீதிகளை அமைக்கும் திட்டத்தின்க கீழ், திருப்பூரில் ஈஸ்வரன் கோவில் வீதியையும் யூனியன் மில் ரோட்டையும் இணைக்கும் புதிய பாலம் அருகே (நொய்யல் ரோடு) 25 கடைகளுடன் இந்த உணவு வீதி அமையவுள்ளது. மாற்று இடங்களும் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளன.

சுகாதார வசதிகள் மற்றும் கடைகள் வடிவமைப்பு

இந்த உணவு வீதியில் அமையும் அனைத்துக் கடைகளும் ஒரே சீரான வடிவமைப்பில் உருவாக்கப்பட உள்ளன. உணவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கைகழுவும் இடம், பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

தெருவோர உணவு விற்பனையாளர்கள், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள், சிறிய மற்றும் பெரிய உணவக உரிமையாளர்கள், பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவு தயாரிப்பாளர்கள், டீ மற்றும் பான விற்பனையாளர்கள் மட்டுமின்றி, புதிதாக உணவுத் தொழிலைத் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிகளும் அரசு உதவிகளும்

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 25 வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார முறைகள் குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற இந்த உணவு வீதியில் வியாபாரம் செய்வதன் மூலம், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை மிக எளிதாகப் பெற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தள்ளுவண்டி உணவிலிருந்து தரமான 'உணவு வீதி' வரை, திருப்பூரின் இரவு உணவு கலாசாரத்திற்கு இது ஒரு புதிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள வணிகர்கள் வரும் 31-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது தளத்தில், அறை எண் 428-ல் அமைந்துள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற 0421-297119 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks