திருப்பத்தூர் அருகே முதியவரின் கட்டை விரலை கரடி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரடியால் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.

சமீபகாலமாக புலி, யானை, கரடி போன்ற விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. காடுகளை அழித்து வனவிலங்குகள் வாழும் இடங்களை ஆக்கிரமிப்பதால், அது ஊருக்குள் சம்பவம் நடக்கிறது. மனிதர்கள் செய்யும் இதுபோன்ற சம்பவங்களால் மனிதர்களுகே அது ஆபத்தாக அமைந்துவிடுகிறது. யானை செல்லும் பாதையில் இடையூறு ஏற்படுத்துவ்தால் அது ஊருக்குள் வருவது, மனிதர்களை தாக்குவது, இதனால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறது.

இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே கால்நடையை மேய்த்துக்கொண்டிருந்த முதியவரை கரடி ஒன்று தாக்கியுள்ளது. அவரின் உயிருக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், கட்டையை விரலை கடித்து துப்பியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு கம்புகுடி பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகன் லட்சுமணன் (60) என்கிற முதியவர் கால்நடை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் முதியவர் கால்நடையை மேய்ப்பதற்காக நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாறையில் பதுங்கி இருந்த கரடி முதியவரை தாக்கி கட்டை விரலை கடித்து துப்பியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மேய்க்க சென்ற முதியவரின் கட்டை விரலை கடித்து துப்பிய கரடியால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Source: Read Full Article