September 2026 Bank Holidays: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்ததிற்கான வங்கி விடுமுறை நாட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்:

ஆகஸ்ட் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்க இரண்டு நாட்களே உள்ளன. புதிய மாத தொடக்கத்தில் பல்வேறு காரணங்களுக்காக கணக்கில் பணத்தை செலுத்தவும், கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும் ஏராளமானோர் வங்கிகளுக்கு செல்வது வழக்கம். அத்தகைய பணிகளுக்கு திட்டமிடுபவர்கள் செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்களில் விடுமுறையில் இருக்கும் என அறிந்துகொள்வதன் மூலம், அநாவசியமான அலைச்சலை தவிர்க்க முடியும். இதற்கு ஏதுவாக செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வங்கிகள் 16 நாட்கள் விடுமுறை..!

வார இறுதி நாட்கள், மாநில அரசு பொது விடுமுறை என ஒட்டுமொத்தமாக 16 நாட்கள் செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த விடுமுறையானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் இயங்காது என கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

எந்தெந்த தேதிகளில் எங்கு வங்கிகள் விடுமுறை?

ஆந்திர, பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 4ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை

ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல்கள் நடைபெறுவதால், செப்டம்பர் 11 அன்று ஜெய்ப்பூரில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஸ்ரீமந்த சங்கரதேவரின் திருபாவ திதியை முன்னிட்டு, செப்டம்பர் 12 அன்று அசாமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

விநாயகர் சதுர்த்தி/வரசித்தி விநாயக விரதம்/விநாயகர் சதுர்த்தி/ஹர்த்தாலிகாவை முன்னிட்டு செப்டம்பர் 14 அன்று தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

செப்டம்பர் 15 அன்று, குஜராத்தில் சம்வத்சரி (சதுர்த்தி பட்சம்) மற்றும் ஒடிசாவில் நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

கோவாவில் விநாயகர் சதுர்த்தியின் இரண்டாம் நாளன்றும் விடுமுறை அனுசரிக்கப்படும்.

ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 21 அன்று அசாமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அதே வேளையில் கேரளாவில் உள்ள வங்கிக் கிளைகள் ஸ்ரீ நாராயண குரு சமாதியை முன்னிட்டு விடுமுறை அனுசரிக்கும்.

செப்டம்பர் 22 அன்று, கர்ம பூஜையை முன்னிட்டு ஜார்க்கண்டில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கிகளுக்கு செப்டம்பர் 23 அன்று விடுமுறை அளிக்கப்படும்.

இந்திரஜாத்ராவை முன்னிட்டு சிக்கிமில் செப்டம்பர் 25 அன்று வங்கி விடுமுறை நாளாகும்.

இதையும் படியுங்கள்: CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?

இந்த மாநில அளவிலான விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதேநேரம், வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, ஏடிஎம்கள் மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Source: Read Full Article