ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’

ஏரியை தூர்வார  2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
News Image

தஞ்சாவூர்: சோழ மன்னர்களின் தொலைநோக்கு சிந்தனைக்கும், நீர் மேலாண்மை அறிவுக்கும் இன்றளவும் எடுத்துக்காட்டாகத் திகழ்வது குமிழித்தூம்பு. நவீன இயந்திரங்கள், பொக்லைன், தூர்வாரும் கருவிகள் என எதுவுமே இல்லாத காலத்திலேயே, ஏரியில் தேங்கும் சேற்றையும், தேவைக்கு அதிகமான நீரையும் அறிவியல் முறையில் வெளியேற்றும் வகையில் இந்தத் தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.

நீரையும் சேற்றையும் பிரித்தறிந்த தொழில்நுட்பம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் குமிழித்தூம்பின் தடயங்களை இன்றும் காண முடிகிறது. பொதுவாக ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரத்தில் இரண்டு கல்தூண்கள் குறுக்கு விட்டங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதியில் இருந்து பூமிக்குள் சுரங்கக் குழாய் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஏரியின் நீர் வெளியேறும் வகையில் மதகு அமைக்கப்பட்டிருக்கும்.

குமிழித்தூம்பின் முக்கிய சிறப்பு, நீரை மட்டும் வெளியேற்றாமல், ஏரியின் அடியில் தேங்கும் சேற்றையும் படிப்படியாக வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதுதான்.

நீரோடி... சேறோடி! தூர்வாரும் ரகசியத்தின் பின்னணி

குமிழித்தூம்பு பொதுவாக கற்பெட்டி போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். அதன் மேற்பகுதியில் சுமார் அரையடி விட்டத்தில் ஒரு துளை இருக்கும். இதனை ‘நீரோடி’ என்பர். இந்தத் துளையை குழவி போன்ற கல் கொண்டு மூடி வைத்திருப்பார்கள்.

அதேபோல், கற்பெட்டியின் தரைமட்டத்திற்கு அருகில் சிறிய அளவில் இரண்டு அல்லது மூன்று துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை ‘சேறோடி’ என அழைக்கப்படும்.

பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில், தண்ணீருக்குள் சென்று நீரோடி துளையை மூடியிருக்கும் குழவிக்கல்லை அகற்றினால், ஏரியில் தேங்கியுள்ள நீர் வெளியேறத் தொடங்கும். இதன் மூலம் பெரும்பகுதி நீரும், அதனுடன் குறிப்பிட்ட அளவு சேறு கலந்த நீரும் வெளியேறும் வகையில் அமைப்பு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏரியின் அடிப்பகுதியில் வண்டல் மண் மற்றும் சேறு அதிகமாகத் தேங்குவது குறையும். ஒருபுறம் பாசனத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதோடு, மறுபுறம் ஏரியின் நீர்த்தேக்கத் திறனும் பாதுகாக்கப்படுகிறது.

ராஜராஜன் பெயர் சூட்டிய குமிழித்தூம்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் ஒரு குமிழித்தூம்பு ‘ராஜராஜன்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படுவது சோழர்களின் நீர் மேலாண்மை பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக ராஜராஜ சோழனின் காலத்தில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்நிலைகள் தொடர்பான கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் குமிழித்தூம்பு அமைந்துள்ள பகுதியை அடையாளம் காண்பதற்காக கல் மண்டபங்களும் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நீர் வெளியேற்றும் அமைப்பு பாதுகாக்கப்பட்டதுடன், அதன் இருப்பிடத்தையும் எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது.

இன்றைய தலைமுறைக்கு சொல்லும் பாடம்

இன்று ஒரு ஏரியைத் தூர்வார பொக்லைன் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏரியின் நீர்மட்டம், வண்டல் படிவு, பாசனத் தேவை, நீர் வெளியேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பத்தை சோழர்கள் உருவாக்கியுள்ளனர்.

நீரை சேமிப்பது மட்டுமல்ல; நீர்நிலையைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பதற்கான வழியையும் உருவாக்கியதே சோழர்களின் சிறப்பு. குமிழித்தூம்பு என்பது ஒரு பழங்காலக் கட்டுமானம் மட்டுமல்ல; நீர் மேலாண்மையில் தமிழர்களின் அறிவியல் சிந்தனைக்கு கிடைத்திருக்கும் கல் சாட்சியாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் வியத்தகு இந்த சாதனை பிரமிக்க வைக்கிறது என்றால் மிகையில்லை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks