திருப்பத்தூரில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கேதாண்டப்பட்டியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை நிரம்பி உள்ளதால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த ‌அதே பள்ளியின் மாணவர்களை பணியில் அமர்த்தி பள்ளம் தோண்ட செய்துள்ளார். இந்த பள்ளி மாணவர்கள் வேலை செய்வதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் இதுகுறித்து அந்த மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, “தலைமையாசிரியர்தான் இந்த வேலையை செய்ய சொன்னார். இதற்கு முன்பு கழிவறையில் அடைப்பு ஏற்பட்டதை நாங்கள் தான் சரி செய்தோம். அதேபோல இன்றும் நாங்களே வேலை செய்கிறோம் என்றும் வேலையாட்கள் வரததால் தலைமையாசிரியர் எங்களை வேலை செய்ய சொன்னார்” என்று வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும், இது போல் மாணவர்களை பணியில் அமர்த்தும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source: Read Full Article