Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!

Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
News Image

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

ஜூலை 21,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.

1. டெல்லி போராட்டம் தீவிரம்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது தடியடி - கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

டெல்லியில் நீட் (NEET-UG) நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய தீவிரப் பேரணியால் தலைநகரம் ஸ்தம்பித்துள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி மெட்ரோவின் 5 முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இணையச் சேவைகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

2.எதிர்க்கட்சிகள் அமளி vs அரசின் மறுப்பு: நீட் முறைகேடு விவாதத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நீட் (NEET) வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரங்களை அவையில் அவசரமாக விவாதிக்கக் கோரி 'ஒத்திவைப்பு தீர்மான' (Adjournment Motion) நோட்டீஸ்களை வழங்கின. ஆனால், அவைத் தலைவர்கள் இந்த நோட்டீஸ்களை ஏற்க மறுத்து நிராகரித்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அவைக்குள் வெடித்தது. தொடர் ஒத்திவைப்புகளுக்குப் பிறகும் இரு தரப்பிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், எந்தவொரு மக்கள் நல விவாதங்களோ, கேள்வி நேரமோ அல்லது புதிய மசோதாக்கள் மீதான பரிசீலனைகளோ நடைபெறவில்லை. இதனால், அன்றைய நாளின் எஞ்சிய பணிகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, இரு அவைகளும் நாள் முழுவதும் (For the Day) முழுமையாக முடக்கப்பட்டன.

3.மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அண்டை மாநிலமான கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணிகளைத் தீவிரப்படுத்த முயன்று வரும் நிலையில், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

4.துப்பாக்கி முனையில் மிரட்டியதாக சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு புகார்.

ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்ததோடு, "சட்டமன்றத்தை மூடினால் உன்னுடைய எலும்புகளை உடைப்போம்" என மிரட்டும் தொனியில் ஆவேசமாகப் பேசினார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி தவெக மாவட்டச் செயலாளர் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் ஜூலை 20 அதிகாலையில் மார்க்கண்டேயன் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு. துப்பாக்கி முனையில் போலீசார், மிரட்டியதாக சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு புகார்.

5.அதிமுகவில் மீண்டும் பிளவு: இபிஎஸ்-க்கு எதிராக சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,150 பேர் கூண்டோடு ராஜினாமா!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவி வந்த உட்கட்சி மோதலின் உச்சக்கட்டமாக, ஜூலை 20 அன்று இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, ராஜினாமா கடிதங்கள் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

6.தந்தை - மகன் இணைந்த நிலையில், பாமக பொதுக்கூட்டம் கூடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறும் என்ன கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக அறிக்கை.

7.எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 5% வரை குறைகிறது - மத்திய அரசு ஒப்புதல்!

பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் (E20 Fuel) வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 5% வரை குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய வாகனங்கள் E20 எரிபொருளுக்கு இணக்கமாக (E20 Compliant) தயாரிக்கப்படுவதால், அவற்றில் மைலேஜ் பாதிப்பு மிகக் குறைவாகவே (1-2%) இருக்கும்.

8.இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’-வுக்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்!

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு (Dengue Vaccine) மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.

9.உள் தமிழ்நாட்டில் ஜூலை 24 வரை சுட்டெரிக்கப் போகும் வெயில் - 4 டிகிரி வரை உயர வாய்ப்பு!

உள் தமிழ்நாட்டில் ஜூலை 24 ஆம் தேதி வரை வெப்பம் அதிகரித்து, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலவீனமான தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த வெப்ப அலை போன்ற சூழல் நீடிக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

10.மறைமலைநகரில் மீண்டும் ஃபோர்டு: எஞ்சின் தயாரிப்போடு கார் உற்பத்தியையும் தொடங்க முதல்வர் விஜய் கோரிக்கை!

அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford), தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியைத் தொடங்குவது குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனையை நடத்தியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் மேத்யூ கோட்லோவ்ஸ்கி (Mathew Godlewski) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். சென்னை அருகே உள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்து, அங்கு ₹3,250 கோடி முதலீட்டில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன எஞ்சின் மற்றும் பவர்டிரெயின் (Next-Gen Powertrains) உற்பத்தி ஆலையைத் தொடங்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks