T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?

T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
News Image

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிந்து அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும், மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டி20 உலக சாம்பியன் யார்?

மகளிர் டி20 உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று லண்டனில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இரு அணிகளும் மிகுந்த பலமிகுந்த அணி என்பதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பலமிகுந்த ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஜார்ஜியா வோல், பெத் மூனி, எல்லீஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வார்ஹாம், சதர்லாண்ட் என பெரிய பட்டாளமே உள்ளனர். கேப்டன் சோஃபி மோலினெக்ஸ் ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.

பந்துவீச்சில் லூசி ஹாமில்டன், கிம் கார்த், நிகோலா கேரி, சதர்லண்ட், ஆஷ்லே கார்டனர், ஜார்ஜியா வார்ஹம் என்று பெரிய பட்டாளமே உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் அதிகளவு ஆஸ்திரேலிய அணியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சவால் அளிக்கும் வகையில் ஆடும் என்பதில் சந்தேகம் இல்லை.

சவால் விடும் இங்கிலாந்து:

இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவிற்கு நல்ல சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சொந்த மண்ணில் ஆடும் இங்கிலாந்துக்கு கேப்டன் நாட்சிவியர் ப்ரூன்ட், எமி ஜோன்ஸ், டென்னி, ஆலிஸ் கேப்சி, ஹீதர் நைட், ஃப்ரெயா, டேனியலி என்று பெரிய பட்டாளம் உள்ளனர். அதேசமயம், அரையிறுதியில் சொதப்பிய எமி ஜோன்ஸ், டேனி, ஆலிஸ் கேப்சி இறுதிப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

இங்கிலாந்து அணியும் பந்துவீச்சில் வலுவானதாகவே உள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு பலமாக லாரன் பெல் உள்ளார். அவருடன் லின்சி ஸ்மித், சார்லட் டீன், சோஃபி, ப்ரெயா உள்ளனர். இவர்கள் பந்துவீச்சில் மிரட்டினால் ஆஸ்திரேலிய அணிக்கு தக்க நெருக்கடி அளிக்க இயலும். ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்து இன்று 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசு எவ்வளவு?

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக ரூபாய் 22.5 கோடி வழங்கப்பட உள்ளது. பலமிகுந்த இரு அணிகள் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks