Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19

Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
News Image

Rohit Sharma 2027 World Cup: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை 19 - ஓய்வு பெறுகிறார் ரோகித் சர்மா?

ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வரும் ஜுலை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள, மூன்றாவது ஒருநாள் போட்டியுடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. மோசமான ஃபார்ம் காரணமாகவும், அணியின் எதிர்கால நலன் கருதியும் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 39 வயதான ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சொதப்பும் ரோகித்..

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.  47 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 26 ரன்கள் மட்டுமே எடுக்க சேர்த்தார். முன்னதாக பர்மிங்ஹாமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில், அதற்கு முந்தைய மூன்று இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர்கள் முறையே 79, 48 மற்றும் 16 ஆக இருந்தன. அதற்கு முன்பும் ரோஹித் ஒரு மோசமான ஐபிஎல் தொடரையே ஆடியிருந்தார். மேலும், அவருக்கு உடற்தகுதிப் பிரச்சினைகளும் இருந்தன. குறிப்பாக கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் உட்பட 241 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தார்.

ஜெய்வாலை விரும்பும் பிசிசிஐ

இதனிடையே "இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, ரோகித் தாங்கள் விரும்பும் அணியில் இடம்பெறவில்லை என்றும், இந்தத் தொடருடன் அவரை அணியிலிருந்து நீக்கப் போவதாகவும் தேர்வாளர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது உடற்தகுதியை மேம்படுத்திய பிறகு, அவர் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பை தேர்வாளர்கள் ரோகித் சர்மாவிடமே ஒப்படைத்துள்ளனர்" என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ரோகித் சர்மாவின் இடத்தில் ஜெய்ஸ்வாலை களமிறக்க பிசிசிஐ விரும்புகிறதாம்.

இதையும் படியுங்கள்: Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?

பிசிசிஐ-யின் நீண்ட காலத்திற்கான திட்டம்:

கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் தேசிய தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனராம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலக்கோப்பைக்கு முன்னதாக சுமார் 20 போட்டிகள் உள்ளன. அந்த 20 போட்டிகளிலும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ விரும்புகிறதாம். ரோகித்தை ஓய்வு பெறுமாறு யாரும் கூற முடியாது, ஆனால் செப்டம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரைப் பொறுத்தவரை, தேர்வாளர்கள் நீண்ட காலத்திற்கான வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனராம். இதனால் ரோகித்தின் முடிவு என்ன என்பது, வரும் ஜுலை 19ம் தேதி உறுதியாகிவிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, இவர் டெஸ்ட் மற்றும் டி20 போன்ற சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks