சென்னை: TNPSC-யில் 839 அரசு வேலைகள்... 56 வகை பணியிடங்களுக்கு மெகா அறிவிப்பு! டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க.

தமிழக அரசு வேலைக்காக தயாராகி வரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. Combined Technical Services Examination (Diploma / ITI Level) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 56 வகையான பதவிகளில் மொத்தம் 839 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆட்சேர்ப்பு மூலம் தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

56 வகையான பதவிகள்

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய பணியிடங்களில்,

சுரங்க முதலாளி (தமிழ்நாடு கனிம நிறுவனம்)
இயக்கூர்தி ஆய்வாளர் நிலை–2
மீன்வள சார் ஆய்வாளர்
உதவி மேலாளர்
விடுதி கண்காணிப்பாளர்
இளநிலை வரை தொழில் அலுவலர்
சிறப்பு பணி பார்வையாளர்
இளநிலை பயிற்சி அலுவலர் (மின் பணியாளர்)
இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் – மின்சார வாகனம்)

உள்ளிட்ட 56 வகையான தொழில்நுட்பப் பதவிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான கல்வித் தகுதி ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும். பொதுவாக ஐடிஐ, டிப்ளமோ, தேசிய தொழிற்சான்றிதழ் (NTC), தேசிய பயிற்சிச் சான்றிதழ் (NAC) அல்லது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத் தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 17, 2026 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) கிடையாது என்பது தேர்வர்களுக்கு முக்கியமான நல்ல செய்தியாகும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (Counselling) அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். இதனால் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் தேர்வர்களுக்கு அரசு வேலை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எழுத்துத் தேர்வு எப்போது?

இந்த ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 20, 2026 முதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு தேதி மற்றும் பிற விவரங்கள் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.

அரசு வேலை கனவுக்கு சிறந்த வாய்ப்பு

தொழில்நுட்பக் கல்வி முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், போட்டித் தேர்வுக்கான தயாரிப்பை இப்போதே தொடங்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிறப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதை மிஸ் பண்ணீடாதீங்க. பல்வேறு பிரிவுகளில் உள்ள வேலை வாய்ப்பு. உங்க நண்பர்களுக்கும் சொல்லுங்க. உங்கள் திறமையை காட்டி உங்கள் வேலையை உறுதியாக்கி கொள்ளுங்கள் நண்பாஸ்.

Source: Read Full Article