CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், பல அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டார்கெட் Ex.அமைச்சர்கள்..!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்களித்தபடியே திமுக ஆட்சியில் அரங்கேறிய ஊழல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளாராம். அந்த வகையில் எ.வ. வேலு மற்று சிவசங்கர் ஆகியோரை தொடர்ந்து, தற்போது செந்தில் பாலாஜியை குறிவைத்து டாஸ்மாக் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை கையிலெடுத்துள்ளது. சென்னை மற்றும் கரூர் உட்பட 41 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் முறைகேட்டில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக செந்தில் பாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சேகர் பாபு, கே. என். நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுகவின் பல முன்னாள் அமைச்சர்களையும் குறிவைத்து அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளனவாம்.

அடுத்த குறி அதிகாரிகள்?

திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவெக அரசு திட்டமிட்டுள்ளதாம். அதேநேரம், உமாநாத், குமரகுருபரன், நந்தகுமார், தாரேஸ் அகமது, பிரகாஷ் மற்றும் முருகானந்தம் போன்ற திமுக ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய ஐஏஎஸ் அதிகாரிகளே மீண்டும் வலுவான பதவிகளை பிடித்தது குறித்து முதலமைச்சர் விசாரிக்க தொடங்கியுள்ளாரம். கட்சிக்கு அல்ல அரசுக்கே உண்மையானவர்களாக இருப்பார்கள் என ஆலோசகர்கள் அளித்த ஆலோசனையின் பேரிலேயே மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்கு முக்கிய பதவி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டடதாம். ஆனால் அவர்களின் செயல்பாடு முதலமைச்சருக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் இவர்களை ஓரங்கட்டவும் அரசு தலைமை பரிசீலித்து வருகிறதாம்.

அதிகாரிகளால் எழுந்த சர்ச்சைகள்:

பத்திரப்பதிவு மற்றும் அறநிலையத்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் குமரகுருபரன் தான் செயலாளராக உள்ளார். அந்த இலாகக்களின் வாயிலாக தான் பழனி கோயில் நிலம் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் துறையின் நிர்வாக இயக்குனராக நந்தகுமார் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் மூடப்பட்ட 717 கடைகளின் விவரங்களை வெளியிடவில்லை. இதனால் அரசின் உத்தரவை அவர் முழுமையாக செயல்படுத்தவில்லையோ? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று பல முக்கிய பதவிகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் இன்றளவும் திமுகவிற்கு ஆதரவாகவும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தலைமைக்கு புகார் சென்றுள்ளதாம்.

இதையும் படியுங்கள்: Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

பட்ஜெட் முடியட்டும்..!

அடுத்தடுத்து எழும் புகார்களையும், அதிகாரிகளின் செயல்பாடுகளயும் முதலமைச்சர் தீவிரமாக கண்காணித்து வருகிறாராம். ஆனால், பட்ஜெட் பணிகள் நடைபெறுவதால் தற்போதைக்கு எத்தகைய இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என கருதுகிறாராம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் சர்ச்சைக்குரிய அதிகாரிகள் மற்றும் கடந்த திமுக அனுதாபிகளாக செயல்படும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தூக்கி அடிக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம். அதேநேரம், கடந்த ஆட்சி காலத்தின் போது பழிவாங்கப்பட்ட பல நேர்மையான மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரவும் பட்டியல் தயாராகி வருகிறதாம். இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு உதாரணமாக தான், உமாநாத் ஐஏஎஸ் மற்றும் அருண் ஐபிஎஸ் ஆகியோரின் பணியிடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாம். இந்த நடவடிக்கைகளில் முதலமைச்சரே நேரடியாக தலையிடுகிறாராம். எனவே, யாருடைய பரிந்துரையின் பேரில் பதவிகளை பெற்று இருந்தாலும், தலைமையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதில் தவெக தரப்பு உறுதியாக உள்ளதாம். அமைச்சர்களுக்கும் இதே எச்சரிக்கை தான் வழங்கப்பட்டுள்ளதாம்.

Source: Read Full Article