Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?

Aadi Perukku holiday Bus :  ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
News Image

விடுமுறைக்கு வெளியூர் பயணம்

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில், கிடைக்கும் விடுமுறையில் சொந்த ஊருக்கும், நண்பர்களோடு வெளியூர்களுக்கு செல்ல மக்கள் விருப்பப்படுவார்கள். ஆனால் ரயில்களில் அனைத்திலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதால் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா.? அல்லது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா.? என காத்திருப்பார்கள். அந்த வகையில், இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வருகிற (31/07/2028) வெள்ளிக்கிழமை, (01/08/2026) சனிக்கிழமை மற்றும் (02/08/2028) ஞாயிற்றுக்கிழமை 03/08/2026 (திங்கட்கிழமை ஆடிபெருக்கு) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

எனவே பயணிகளின் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31/07/2028 (வெள்ளிக்கிழமை) அன்று 420 பேருந்துகளும். 01/08/2026 (சனிக்கிழமை) 330 பேருந்துகளும் 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31/07/2026 வெள்ளிக் கிழமை அன்று 120 பேருந்துகளும் 01/08/2026 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் 02/08/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து எங்கே.?

மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 31/07/2026 மற்றும் 0108/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 45 சிறப்பு பேருந்துகளும் 02/08/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 50 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமறை முடிவடைந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பும் வகையில், வருகிற ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5721 பயணிகளும் சனிக்கிழமை 2396 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6430 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instein மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks