தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் வாராந்திர வரப்பிரசாதம்!

தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் வாராந்திர வரப்பிரசாதம்!
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை இலக்கை அடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூர பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வார இறுதி மற்றும் திருவிழா காலங்களை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி பயணம் செய்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே கூடுதல் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் விரைவாக நிரம்பி விடுவதால், கூடுதல் ரயில்களை இயக்குவது வழக்கமாக உள்ளது.

அந்த வரிசையில், இந்த முறையும் பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய வாராந்திர சிறப்பு சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் மூலம் சென்னை புறநகர் பகுதியிலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகளுக்கு மாற்று வசதி கிடைக்க உள்ளது. இரவு நேரத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை இலக்கை அடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூர பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தாம்பரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06037) ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 7 வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணி - தாம்பரம் சிறப்பு ரயில் (06038) ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் மூலம் வழித்தடத்தில் உள்ள பல நகரங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks