சோசியல் மீடியா மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். இதுபோல மேகதாது அணை பிரச்சனைக்கும் பதிவிடுங்கள் என்று இளைஞர்களுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேகதாது அணைக்கட்டு திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று பிலிகுண்டுலுவில் இருந்து நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இன்று சேலத்தில் இரண்டாவது நாள் நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.

நடை பயண பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, காவிரி ஆற்றில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். காவிரி ஆறு இயற்கை நமக்கு கொடுத்த வரம். இப்போது அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்டி விட்டால் நமக்கு தண்ணீர் வராது. விவசாயம் செய்ய முடியாது. காவிரியில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் இந்த வருடம் தண்ணீர் திறக்கப்படவில்லை. காரணம் 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது

மேகதாது அணை கட்டி விட்டால் குடிப்பதற்கு தண்ணீர் கூட நமக்கு கிடைக்காது. இது உங்கள் பிரச்சனை. நம்ம பிரச்சனை. நாளைக்கு உங்கள் பேரக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தீர்கள் அதுபோல இந்த பிரச்சனைக்கும் இந்த பிரச்சனைக்கும் ஒன்று சேர வேண்டும். அணை கட்டும் திட்டத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

கோபத்தை வெளிப்படுத்துங்கள்

உங்களது உணர்வை தெரிவியுங்கள், கோபத்தை வெளிப்படுத்துங்கள். இது நமது வாழ்வாதார பிரச்சனை, சாதாரண பிரச்சனை அல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களையும் பாதிக்கும் பிரச்சனை.

காட்டை அழித்து அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இயற்கை கொடுத்த வரத்தை அழித்து அணை கட்ட முயற்சிக்கிறார்கள். சோசியல் மீடியா மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். இதுபோல இந்த பிரச்சனைக்கும் பதிவிடுங்கள்’’.

இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Read Full Article