அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார் என முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து முதல்வர் விஜயை அவர் ஒருமையில் பேசுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜயும் எம்ஜிஆரும் ஒன்றா?

திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் விஜய் இந்த நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தார் என சொல்ல முடியுமா?.. ஏழை மக்கள், பெண்கள், தொழிலாளர்கள் என யாருக்காவது உதவி செய்தாரா?.. எந்த வகையில் இவர் முதலமைச்சராக வந்தார் என எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார். எம்ஜிஆரும், விஜயும் ஒன்றா?.. எம்ஜிஆர் திமுக பொருளாளர், தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி திமுகவின் வளர்ச்சியில் பங்காற்றியுள்ளார்.

இன்றைக்குள்ள சாதாரண முதலமைச்சர் சினிமாவில் நடித்தபோது 'விஜய்', அரசியலுக்கு வந்த பிறகு 'ஜோசப் விஜய்' என்கிறார். திருச்சியில் தேவாலயத்தில் முட்டி போட்டு நடக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு திருச்செந்தூருக்கு வந்து வேலை தூக்கி கொண்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். எம்ஜிஆர் கொல்லூர் மூகாம்பிகை வீரவாள் கொடுத்ததைப் போல விஜயும் செய்கிறார். எந்த வகையில் எம்ஜிஆருடன் விஜயை ஒப்பிட முடியும்?” என தெரிவித்தார்.

ரௌடி போல நடக்கும் ஆதவ் அர்ஜூனா

தொடர்ந்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “இன்றைக்கு விஜய் ஆட்சி நடத்தவில்லை. ஆதவ் அர்ஜூனா நடத்துகிறார். அவர் நடந்து வரும்போது ரௌடி மாதிரி இருக்கிறது. நீ ஆட்சிக்கு வந்ததால் அப்படி நடக்குறீயா?.. தவெக ஆட்சி போனால் உன் நிலைமை என்னாகும்?.. எவ்வளவு நாள் இந்த ஆட்சி இருக்கும்?

நான் சொல்கிறேன், 6 மாத காலத்தில் தவெக ஆட்சி கவிழும். அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். திமுகவை உதயநிதி ஸ்டாலின் வழி நடத்துவார். திமுக எம்.பி. திருச்சி சிவா போன்றோர் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமருவார்கள். அப்படி ஒரு நிலை வரும்போது நீ சினிமாவில் என்ன தப்பு செய்தார், வருமான வரித்துறையில் என்ன ஏமாற்றினாய் என அனைத்தும் வெளிவரும். நீ சம்பாதித்த பணத்தில் ஒரு பைசா ஏழைக்கு உதவி செய்த நீ எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசலாமா?.. எம்ஜிஆர் எப்படிப்பட்ட தலைவர்.. அவர் அண்ணாவால் பாராட்டப்பட்டு, கலைஞர் கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.

இதையும் படிங்க: Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

என்னை ஜெயிலில் பிடித்துப்போட்டால் எல்லாம் முடிந்து விட்டதா?.. ஜெயலலிதாவும் தான் என்னை 37 நாட்கள் திருச்சி ஜெயிலில் கொண்டு போய் வைத்தார்கள். என் மேல் குண்டர் சட்டம் போடப் போகிறார்கள் என அங்கிருந்த ஜெயில் சூப்பிரண்டு சொன்னார். நான் இரண்டு கூட போடுங்கள் என கூறினேன். என்னை கைது செய்து மிரட்டினால் என நினைத்தால் எதுவும் நடக்காது. இடைத்தேர்தலில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி அவரது சகோதரர் மீது பொய்யான வழக்கு போட்டிருக்கிறார்கள். உங்களால் கைது செய்ய முடிந்ததா?” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article