Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்

Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
News Image

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். ஆனால், மொஜ்தபா கமேனி ட்ரம்ப்பை சந்திக்க மாட்டார் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் கூறியது என்ன.?

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகர் மொஹ் சன் ரெசாய், ட்ரம்ப்பை மொஜ்தபா சந்திக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில் தாங்கள் இருப்பதாகவும்ம, ஆனால், அந்த செயல்முறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதனால், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறாது என்றும், பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அமெரிக்காவிடமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்குமாறு தாங்கள் வெளிப்படையாகவே கோரி வருவதாகவும், ஆனால், இந்த விஷயத்தில் அமெரிக்கா உண்மையை கூறவில்லை என்றும் ரெசாய் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கூறியது என்ன.?

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை இது குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஹ்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அது உதவுமானால், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் தனக்கு பிடித்தமான நபர் அல்ல என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், அவ்வாறு சந்திப்பதை அவர் கௌரவமாகவும், மரியாதையாகவும் உணர்வதாக அவர் கூறினார்.

"நான் சந்திக்க விரும்பவில்லை, ஆனால் ஒருவேளை சந்தித்தால், அவரை சந்திப்பதை நான் பெருமையாகக் கருதுவேன். நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். ஆனால், அப்படி வந்தால், ஒருவேளை நான் அவரை சந்திப்பேன். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதைப் பற்றி நான் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை. நான் அதை முன்மொழியவில்லை. சிலர் அதை முன்மொழிந்துள்ளனர். அது நடந்தால், நடக்கும். நான் மரியாதையுடன் நடந்துகொள்வேன்," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஏற்கனவே கருத்து தெரிவித்த அப்பாஸ் அரக்சி

அதைத் தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ட்ரம்ப் ஒரு சந்திப்பிற்குத் தயாராக இருந்தார் அல்லது சந்திக்க விரும்பினார் என்று ஒரு செய்தியை பார்த்தேன். ஆனால் நாம் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் நிஜ உலகில் வாழ வேண்டும்." என்று கூறினார்.

இந்த நிலையில் தான், தற்போது மொஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகர், ட்ரம்ப் - மொஜ்தபா சந்திப்பு நிகழ வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks