தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் முன்னறிவிப்பு இன்றி நான் வருவேன், இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்- மதுரை விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.

அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது..," நம்முடைய மதுரை மண்ணில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு உதவி நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்துள்ளனர். நேரடியாக அதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளேன்.

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்ய உள்ளீர்களா குறித்த கேள்விக்கு:

அமைச்சர் என்பதை விட ஒரு சகோதரன் என்ற முறையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் முன்னறிவிப்பு இன்றி நான் வருவேன், இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கூட்டுப் பொறுப்புணர்ச்சி என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

மாணவர்களுக்கு தரமற்ற முறையில் பைகள் வழங்கப்படுவதாக வீடியோ பரவுவது குறித்த கேள்விக்கு:

சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனே விளக்கம் கேட்டேன் அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் மட்டும் பைகளை வழங்குவதற்கு குழந்தைகளை அழைத்தபோது ஏற்கனவே அந்த குழந்தைகளுக்கு தரமான பைகளை அவர்களது பெற்றோர்கள் வாங்கி கொடுத்துள்ளார்கள். இந்த பைகளையும் வாங்கிக் கொண்ட குழந்தைகள் விளையாட்டாக தூக்கி போட்ட போது அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் நேரடியாக சென்று வீசப்பட்ட பைகளையும் எடுத்து வைத்துள்ளார்கள். அந்த குழந்தைகளுக்கு தேவைப்படாமல் இருந்திருக்கலாம் இன்னும் நிறைய குழந்தைகளுக்கு அது தேவைப்படும். எல்லா குழந்தைகளுக்கும் சரியாக சமமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம் சமூக வலைதளத்தில் சுட்டுக்காட்டியுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பைகளை வாங்கிக் கொண்டனர்.

திமுக கூட்டணி கட்சிகளின் தயவால் இந்த ஆட்சி தொடர்கிறது விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது கொடுத்த கேள்விக்கு:

மூத்த அரசியல் தலைவர் முதிர்ச்சியான தலைவர் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சீனியர் அரசியல்வாதி அப்படி கூறியிருக்க வேண்டாம் அதனை தவிர்த்திருக்கலாம். கூட்டணியில் இருப்பவர்களை சொன்னது சொன்னபடி முதல்வர் அமைச்சரவையில் இடம் தந்துள்ளார். வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது அவருடைய தனி மனிதனுக்கு கிடைத்தது அல்ல நீண்ட நெடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அங்கீகாரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுதந்திரத்திற்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது என்பது குரல் அற்றவர்களுக்கு குரலாக ஒழிப்பது என்ற அடையாளம், கூட்டணி என்ற பெயரில் அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு அங்கீகாரத்தை இத்தனை நாள் தராமல் இருந்தார்கள் வரலாற்றில் முதன் முதலாக அரசியலில் முதல்வர் செய்து காட்டியுள்ளார் உங்கள் மூலமாக நன்றியை பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகிற சட்டசபையில் நீட் தேர்வு ரத்துக்கான தீர்மானங்கள் கொண்டுவரப்படுமா குறித்த கேள்விக்கு:

இன்னும் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.பொறுத்திருந்து பாருங்கள் வெயிட் அண்ட் வாட்ச் என்றார்.

Source: Read Full Article