டாஸ்மாக்கிற்கு திரும்பும் ரூ.1200 கோடி

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபான பெட்டிகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த முறைசாரா கட்டணங்கள் மூலம், அரசுக்கு மாதம் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதனை தற்போது தடுத்துள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளர்.

மின்வெட்டு உண்மைதான்..

“இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான்; அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ தயங்கவில்லை. எனினும், இது மின்சார விநியோகத்தினால் ஏற்படும் பிரச்சனை அல்ல, பகிர்மானத்தால் ஏற்படுகிறது” - திருவண்ணாமலையில் மின்வாரிய மேலாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 இருந்து ரூ.957.50 ஆக உயர்வு. கடந்த மார்ச் 7ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிர்ச்சி

காங்கிரசுடன் இனி உறவு கிடையாது

இனி எந்தச் சூழலிலும் முதுகில் குத்துவிட்டு ஓடியவர்களை சேர்க்க மாட்டோம்; அவர்களோடு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது; இனி கட்சி தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; காங்கிரஸ் இடம்பெற்றுள்ள எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இணைய மாட்டோம் -ஆர்.எஸ்.பாரதி

கடின உழைப்பே காரணம்

”பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் வெற்றிக்கு கடின உழைப்பே காரணம்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதிலும், தொடர்ந்து உழைத்தால் ஒருநாள் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் கூறினோம்; அதைத்தான் அவர்கள் பின்பற்றினர்” - பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி

குக்கரில் வெந்த கஞ்சா

கேரளம்: திருச்சூர் அருகே போலீஸ் வருவதை அறிந்து குக்கரில் அரிசியின் உள்ளே கஞ்சாவை பதுக்கி சமைத்த நபர்; விசில் அடித்ததும் வித்தியாசமாக பரவிய வாசனையால் சிக்கினார். குக்கரின் உள்ளே சமைத்த சோற்றில், பாக்கெட் ஆக இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பினேஷ் (40) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திரைப்பட நடிகர் காலமானார்

தேசிய விருது வென்ற பிரபல மலையாள திரைப்பட நடிகர் |சலிம் குமார் (56) காலமானார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. ரசிகர்கள் சோகம்.

ஊக்கமளிக்க ஊக்கத்தொகை வழங்கும் பூட்டான்

மூன்றாவது மற்றும் அதற்கு அடுத்ததாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு 3 வயது வரை மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பூட்டான் அரசு அறிவிப்பு.
8 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் | குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த இத்திட்டம் தொடக்கம்

பிசிசிஐ சிறப்பு அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெற்றோரும் அவருடன் இருக்க பிசிசிஐ அனுமதி
15 வயதே ஆகும் வைபவ் சீனியர் அணியில் விளையாட இருப்பதால், அவரின் வசதிக்காக இம்முடிவு எனத் தகவல்

Source: Read Full Article