முதல்வர் விஜய் இன்று (ஜூன் 9) சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார். சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் இன்று மாலை இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். முதல்வராக விஜய் பங்கேற்கும் முதல் அரசு விழா இதுவாகும்.

முன்னதாக மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். பதவியேற்பு விழா மேடையிலேயே இதுதொடர்பான கோப்பில் விஜய் கையெழுத்து இட்டிருந்தார்.

சிங்கப்பெண் அதிரடிப் படையின் சிறப்பு என்ன?

சிங்கப்பெண் அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு எஸ்.பி. 2 டி.எஸ்.பி., மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டனர்.

பெண் ஐ.ஜி. தலைமையில் பெண்கள் பாதுகாப்புக்கு என தனியாக உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இலச்சினை, காணொளி வெளியீடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். பின்னர் இது தொடர்பான சிறப்பு திட்ட இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப் படையின் செயல்பாடுகள் குறித்த ஏஐ காணொளியும் வெளியிடப்பட்டது.

அதையடுத்து பிரத்யேக வாகன இயக்கத்துக்கான ரிமோட்டை இயக்கி முதல்வர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்தார். உடனே மேடையை விட்டு கீழே இறங்கிவந்த முதல்வர் விஜய், அதிரடிப்படை வாகனத்தை இயக்கிப் பார்த்தார். அதைத் தொடர்ந்து சிங்கப்பெண் அதிரைப் படை வாகனம் சீறிப் புறப்பட்டது.

Source: Read Full Article