முதல்வர் விஜய் இன்று (ஜூன் 9) சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார். சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் இன்று மாலை இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். முதல்வராக விஜய் பங்கேற்கும் முதல் அரசு விழா இதுவாகும்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜயின் உரை:

சில நிகழ்ச்சிகள் எப்போதும் நம் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். இது அத்தகைய நிகழ்ச்சி. இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய ஒன்று. பெண்கள் பாதுகாப்பு பற்றிய எனது வாக்குறுதி தேர்தலுக்கானது மட்டுமல்ல, நம் வீட்டில் பாட்டி, அம்மா, அக்கா என ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம்.

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் ஜீரோ டாலரன்ஸ்

சில செய்திகள் என்னைப் பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் எனக்கு எந்த சகிப்புத் தன்மையும் இல்லை. போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இந்த பிரச்சினை திடீரென போன மாதத்தில் உருவானதில்லை. பல்லாண்டுகளாக இருக்கும் பிரச்சினை.

இதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை கிடையாது. அதில் சமூக, தனிமனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டு உள்ளது.

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்போருக்கு கடும் நடவடிக்கைகள் இருக்கும். சார்ஜ்ஷீட் துரிதமாக போடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ட்ரோன் வாயிலாக பேட்ரோல் முறை ரோந்து

இதற்காக முதல்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படும். புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக ட்ரோன் வாயிலாக பேட்ரோல் முறை ரோந்து உருவாக்கப்படும். பெண்களுக்கான கண்ணியத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை வழங்கப்படும்''

இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Source: Read Full Article