மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக ப. ஆகாஷ்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி கோட்டத்தின் சார் ஆட்சியராகவும், பெருநகர் சென்னை மாநகராட்சியில் வட்ட துணை ஆணையராகவும், சென்னை (வடக்கு) குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் செயல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்

மேலும், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மதுரை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Source: Read Full Article