"இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து எப்போது?" நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

"இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து எப்போது?" நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

“ரூ.111 கோடி திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள்” - சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையென நாடாளுமன்றத்தில் தகவல்!

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே சர்வதேசப் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கும் திட்டம் தற்போது பல்வேறுத் தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்களால் முடங்கிக் கிடப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பியக் கேள்விக்கு, மத்தியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் விரிவானப் பதிலளித்துள்ளார்.

திட்ட அறிக்கையில் குறைபாடுகள்: 

இராமேஸ்வரத்தில் பயணிகள் முனையம் (Passenger Terminal) அமைப்பதற்காகத் தமிழ்நாடு கடல்சார் வாரியம் சமர்ப்பித்த ரூ.111.89 கோடி மதிப்பிலான விரிவானத் திட்ட அறிக்கையில் (DPR) சில முக்கியத் தொழில்நுட்பக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிகள் நிலுவை: 

இத்திட்டத்தைச் செயல்படுத்த மிக முக்கியமானத் தேவையானச் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகள் இதுவரைப் பெறப்படவில்லை. இந்த அனுமதிகள் இன்றிப் பணிகளைத் தொடங்க முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை தரப்புத் தயார்நிலை: 

இலங்கையின் தலைமன்னார் பகுதியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது ஏதும் தயாராக இல்லை என வெளியுறவு அமைச்சகம் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி ஒதுக்கீடு சிக்கல்: 

தற்போதுச் செயல்பாட்டில் உள்ள 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப் போதுமான நிதி வசதி இல்லை. இருப்பினும், அடுத்து வரவிருக்கும் 'சாகர்மாலா 2.0' திட்டத்தின் கீழ் இதனைச் சேர்க்க வாய்ப்புள்ளதா என்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேற்கூறியக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய அனுமதிகளுடன் புதியத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறுத் தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலானச் சுற்றுலா மற்றும் வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் முட்டுக்கட்டைப் பயணிகள் மற்றும் மீனவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.







கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks