தமிழகத்தில் அனல் பறக்கும் எஞ்சின் அரசியல்: டபுள்.. டப்பா.. டாப்.. - மக்களின் சாவி யாருக்கு?

தமிழகத்தில் அனல் பறக்கும் எஞ்சின் அரசியல்: டபுள்.. டப்பா.. டாப்.. - மக்களின் சாவி யாருக்கு?

மோடி, ஸ்டாலின், விஜய் இடையே வெடித்த வார்த்தைப்போர் - 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் 'பஞ்ச்' டயலாக்குகளால் அதிரும் மேடைகள்!

சென்னை: தமிழகத்தில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான மோதல் இப்போது 'எஞ்சின்' அரசியலாக உருவெடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் நடத்தும் இந்த மகா பரீட்சையில் மதிப்பெண்களைப் பெற ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, 'டபுள்' எஞ்சின், 'டப்பா' எஞ்சின் மற்றும் 'டாப்' எஞ்சின் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போதைய அரசியல் களத்தை உச்சகட்ட சூட்டுக்குக் கொண்டு சென்றுள்ளன.

கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியின் 'டபுள் எஞ்சின்' அரசு அவசியம்" என முழங்கி, இந்தப் புதிய அரசியல் மோதலுக்கு ஸ்டார்ட் கொடுத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "டபுள் எஞ்சின் என்று சொல்லி வடமாநிலங்களை ஏமாற்றுவது தமிழகத்தில் எடுபடாது; இது உண்மையில் 'டப்பா எஞ்சின்'" எனச் சாடினார். அத்துடன் நில்லாமல், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமையைச் சுட்டிக்காட்டி அந்த எஞ்சின்கள் அங்கு எங்கே போயின? என்ற 'ஷார்ப்' ஆன கேள்வியையும் முன்வைத்தார்.


இந்த இருமுனைப் போட்டிக்கு இடையே, நேற்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த விவாதத்தில் குதித்து ஒரு 'டிவிஸ்ட்' வைத்துள்ளார். "இங்கு டப்பா எஞ்சின், ஓட்டை எஞ்சின் எனப் பலப் பேச்சுகள் எழலாம். ஆனால், மக்களாகிய உங்களின் ஆதரவுடன் தமிழகத்தின் 'டாப் எஞ்சின்' நமது கட்சிதான் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்" என 'டாப் கியரில்' பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அரசியல் மேடைகளில் தங்களின் பலத்தைக் காட்ட இப்படி பஞ்ச் வசனங்கள் பறந்தாலும், இதற்கான இறுதித் தீர்ப்பு மக்களின் 'ஒரு விரல் புரட்சியில்' தான் அடங்கியுள்ளது.


வரும் 2026 தேர்தலில், மக்கள் எந்த எஞ்சினுக்கு வாக்களித்து மதிப்பெண் வழங்கப் போகிறார்கள்? யாருடைய கையில் ஆட்சி அதிகாரத்தின் சாவியைக் கொடுக்கப் போகிறார்கள்? என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த ரிசல்ட் நாளில்தான் உறுதியாகும். அதுவரை தமிழக அரசியல் களம் இந்த 'எஞ்சின்' மோதல்களால் இன்னும் பல ஹாட் விவாதங்களைக் காணப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks