Rain Breaking: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்: IMD எச்சரிக்கை! Heavy Rainfall Warning for 10 TN Districts, IMD Says

கனமழை எச்சரிக்கை: பொதுமக்கள் கவனமுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

விருதுநகர், புதுக்கோட்டையில் தலா 7 செ.மீ. மழை பதிவு; பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலன்குளம் மற்றும் அருப்புக்கோட்டையில் தலா 7 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, மணமேல்குடி, அரிமளம் மற்றும் கீரனூரில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. எனவே, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்ட மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஊரில் மழையா? வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப கவனமுடன் இருங்கள்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks