கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்! Bomb Threat to Coimbatore Collector Office for 3rd Time Via E-mail

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்! Bomb Threat to Coimbatore Collector Office for 3rd Time Via E-mail

 

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது முறையாகும்.

இன்று காலை 10:45 மணியளவில் ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடங்கள் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks