கூலி பட நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல தடை- கேரள நீதிமன்றம் உத்தரவு! Soubin Shahir Denied Permission to Travel Abroad in Financial Fraud Case

கூலி பட நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல தடை- கேரள நீதிமன்றம் உத்தரவு!  Soubin Shahir Denied Permission to Travel Abroad in Financial Fraud Case

பிரபல மலையாளத் திரைப்படம் "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகருமான சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்லக் கொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 



பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணமோசடி குற்றச்சாட்டு:

"மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் ரூ. 7 கோடி முதலீடு செய்ததாகக் கேரளாவைச் சேர்ந்த சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்திலிருந்து தனக்கு வாக்களிக்கப்பட்ட லாபத்தில் 40% பங்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் ரூ. 47 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கில் சௌபின் சாகிரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், அவருக்குக் கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

வெளிநாடு பயணத்திற்கு தடை:

இந்நிலையில், துபாயில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி சௌபின் சாகிர் கொச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து, வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்திருந்ததே இந்தத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யச் சௌபின் சாகிர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks