மகளிர் விடியல் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசம்... மடக்கிப் பிடித்த ஆட்டோ டிரைவர் ஓட்டுநருடன் வாக்குவாதம்!

மகளிர் விடியல் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசம்... மடக்கிப் பிடித்த ஆட்டோ டிரைவர் ஓட்டுநருடன் வாக்குவாதம்!

மகளிர் விடியல் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆவேசம்... மடக்கிப் பிடித்த ஆட்டோ டிரைவர் ஓட்டுநருடன் வாக்குவாதம்!



வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து குடியாத்தம் வரை இயக்கப்படும் 'மகளிர் விடியல்' பேருந்து, பெண்கள் கைக்காட்டியும் நிற்காமல் சென்றதால், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்தை மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பேருந்தை நிறுத்த முடியாது என ஓட்டுநர் தெனாவட்டாகப் பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.TN 23 NO 2227 என்ற எண் கொண்ட அந்த அரசுப் பேருந்து இன்று காட்பாடியிலிருந்து குடியாத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, லத்தேரி அடுத்த பட்டியூர் மற்றும் எடப்பாளையம் கிராம பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் காத்திருந்து கைக்காட்டியும் பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட முகமது என்ற ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பெண்களைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பேருந்தை முந்திச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார். ஆத்திரத்துடன் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த அவர், "பேருந்து காலியாக இருந்தும் ஏன் நிறுத்தாமல் செல்கிறீர்கள்? வயதானவர்கள் நீண்ட நேரமாகக் காத்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பேருந்து ஓட்டுநர், "வண்டியெல்லாம் நிறுத்த முடியாது; நீ எங்க வேணாலும் போய்ச் சொல்லு" என்று மிகவும் "தெனாவட்டாக"ப் பதில் அளித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசின் முக்கியத் திட்டமான 'மகளிர் விடியல்' பேருந்தில் இது போன்ற அலட்சியமான செயல் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் "கடும் கண்டனங்களைத்" தெரிவித்து வருகின்றனர்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks